கடவுள் ...


உலக அதிசயம் எல்லாம் 
உன் முன்னே 
தூசியாய் ..

உன்னை கண்டபின்பும் 
கடவுளையும் தேடுவார் உண்டோ ?

மனிதனுக்கு மனிதம் 
உணர்த்துபவளே ..

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தமே ..
தாய்மை தளும்பும் 
அன்னையே நீ வாழ்க !!!

                         ~யசோதா காந்த் 

சந்தேகம் ...

எப்படி அழிப்பேன்
என்னுள் ஆணி வேராய் சந்தேகம் 
பொய்யானதை மெய்யாக்கி
எனை நானே சிதைத்து
என்னில் அன்பு செய்வோரையும்
சுடும் சொல்லால் வதைத்து
கற்பனை குதிரையை
கண்மூடித்தனமாய்  ஓடவிட்டு

இல்லாதொன்றை இருப்பதாக்கி
இன்ப வாழ்க்கையில்
இன்னல்களை சொந்தமாக்கி
சின்னாபின்னாமாக்கும் இப்பிணி
குணமாகுமோ என்னிலிருந்து?
உயிராய் எனை நேசிக்கும் மனமும்
வெறுப்பாய் மாற செய்யுதே
மீளா குழிதனிலிருந்து
மீள்வேனோ 
   என்னிலை நீளுமோ 
   விடை தெரியா இந்நிலை ...
 
~யசோதா காந்த் ~