தவமின்றி கிடைத்த வரமே ,,,என் அன்பு தோழா கண்டதில்லை
உன்போல் ஓர் ஆண்மகனை
நல்லவர் போல் நய வஞ்சகம் பேசும்
சில கயவர்களுக்கிடையே
நல்ல மனம் படைத்த தூய துணை நீயடா
உள்ளொன்றும், புறமொன்றும் பேசி
புறச்சொல்லால் புகைந்த மனம் கொண்டவர் மத்தியில்
உண்மை உரைத்து என்னிடம் உயர்ந்து நின்றாயடா

போகப்பொருளாய் பெண்ணைக்காணமல்
அன்னையாய் , சோதரியாய்,
பிள்ளை மொழி பேசும் மகளாய் கண்டு
நட்புக்கு பெருமை சேர்த்தாய்

நட்பே, நல்முத்தே
நான் காணும் என் சொத்தே
தவமாமின்றி கிடைந்த வரம் நீ

இறை தவத்தால் மட்டும் வரம் கிடைக்கும்
என யார் சொன்னார்
நட்புதவத்தால் வரமாய் நீ கிடைத்தாய்~அன்புடன்  யசோதா காந்த் ~