அன்னை போல நீயும் .....அன்பே என் தாயின் அணைப்பை
உன்னில் உணர்ந்தேனே
தாய் அவள் தவிப்பை
உன்னில் அறிந்தேனே

அன்னை அவள் பரிவை
உன்னில் கண்டேனே
அன்பான  அவள் கொஞ்சல்களை
உன்னிடம் அனுபவித்தேனே

அன்னை அவள் பொய் கோபம்
உன்னிடமும் அப்படியே
பாசமிகுதியால் சின்னசின்ன சண்டை
நம்மிலும் நடக்கிறதே

என் அன்பு காதலா
நீயும் என் தாயின் சாயலே
உன் மடிமீது தலைவைத்து
நானும் சிறு குழந்தை போலானேனே

`அன்புடன் யசோதா காந்த் ~