காயங்கள் ...ஏனோ எனக்கு கனவுகள்
வருவதே இல்லை ...
உணர்வுகள் மங்கி போனதாலோ?
எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஆனதாலோ?
இயற்கையை ரசிக்க மறந்தேன்
நண்பனையும் எதிரியையும் ஒன்றாய் காண்கிறேன்
எதுவும் பிடிக்கவில்லை
என்னையும் எனக்கு பிடிக்கவில்லை
 கத்தியின்றி இரத்தமின்றி
காயங்கள் மட்டும் என்னுளே .....

~அன்புடன் யசோதா காந்த் ~