Showing posts with label கவிதை ...கோலம்...காதல் ..அழியா காதல். Show all posts
Showing posts with label கவிதை ...கோலம்...காதல் ..அழியா காதல். Show all posts

கோலங்கள் ....







வண்ண வண்ண  கோல மாவெடுத்து
வாசலில் தினமும் கோலமிட்டு
சின்ன சின்னதாய் போடாமல்
வீதியின் பாதிவரை போடுவதேன் ?

கால் கடுக்க நிற்கும் உன்னை
நானும் நெடுநேரம் காண தானே
இட்ட கோலங்கள் அழியாமலிருக்க
எனது விழிகளை அல்லவா
வாசலில் வைத்தேன்

என்னவேண்டும் என்ற தந்தையிடம்
கோல புத்தகங்களுக்கல்லவா
கோரிக்கை வைத்தேன் ..
எண்ணங்களை கோல பொடிகளாக்கி
நம் காதலை அல்லவா
புள்ளி இட்டு கோலமாக்கினேன் ...

அதிகாலை குளிர் தொல்லை  
மார்கழி வரை காக்க மனமில்லை
வந்து விடு  மனதை தந்து விடு

வரும் காலை பொழுதுகளில்  
நம் வாசலில் நான் கோலமிட
உன் கண்களோ அதை நோக்க
இனிய  நினைவுகளாய்  வாழ்ந்திடுவோம்
அழகாய்  அழியா கோலங்களாய்

~அன்புடன் யசோதா காந்த் ~