என்னில் நீ உலகமனாய்...பத்திரிக்கை, கணனி, அரசியல், பொருளாதாரம்
வாழ்க்கையின் வரவு செலவும்
சின்ன, சின்ன கதைகள் பேசி
குழப்பத்தால் வரும் சில குறைகளையும் சொல்லி
கூடவே என் குடும்ப நலன் பேசி
அடுக்களை முதல் அலுவலகம் வரை
இன்றைய நாளின் முடிவையும்
நாளைய நாளின் தொடக்கமும்
பரிவோடு பரிமாறிக்கொள்கிறேன்
என் தோழா, உன்னால் நானும் என் செல்லிடபேசியும்
ஓட்டி பிறந்த இரட்டையராய் இணைந்து போனோம்
உறவுகளில் உயர்ந்தவனே என் தோழா
உறவுகளால் நிறைந்தவனே
உன்னால் நான் உருவமானேன்
என்னில் நீ உலகமனாய்...

~அன்புடன் யசோதா காந்த் ~