எங்க வீட்டு வாசற்படி...



வீட்டுக்கு வாசல் படியும் திண்ணையும் அழகோ அழகு
ஆயிரம்நினைவுகளை  சொல்லும் பழைய வீடும் முற்றமும்
எனக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் தோழி வாசல் படியே
தலை வாரி விடும்போதும் ...
கீரை ஆய்ந்து அரிசியில் கல்பொறுக்கும்போதும்...
வேலைகள் முடிந்து பக்கத்துவீட்டு மாமியிடம் ஊர்கதைகள் பேசும் போதும் அப்பாவிற்க்காய் காத்து இருக்கும் போதும்  ...
சண்டை குழப்பம் தீர சாய்ந்து உக்காரும்போதும் ...
மல்லிகை சூடி விளக்கேத்தும்போதும்....
வாசல்படிதானே ....அனைவருக்கும் தோழி  ...
எனக்குமட்டுமா...
எல்லோருக்குமே ...வாசல்படியில் கதைகள் உண்டே ...
நாகரீகம் கூடிபோனதாலே
வாசற்படியும் திண்ணையும் இல்லா
அடுக்கு மாடியில் குடித்தனம்
கண்மூடி கற்பனையாய் இல்லாததை இருப்பதாக
கண்ணில் நிறுத்தி பார்க்கிறேன் ...நான்
 எனில் நீங்களோ ?//??????????????????????
~அன்புடன் யசோதா காந்த்~












2 Responses

  1. Ponra Says:

    வாசல் படி அது மனங்களையும் திறந்ததுண்டு, தெருவில் செல்லுவோரிடமான உறவை பலப்படுத்தியதுண்டு.

    இன்று என் வீட்டிலும் வாசற்படி உண்டு அடுத்த வீட்டிலும்,எதிர் வீட்டிலும் அதற்கடுத்த வீட்டிலும் இன்னும் பல சுவாரஸ்யங்கள் நாங்கள் அனுபவித்து வருகிறோம், ஆனால் அன்று எங்களுக்கு விடுப்பாயிருக்க வேணும்.


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..