கருணை இல்லா கற்புக்கரசி...




பத்தினி பெண் நீ என்பதால்
உன்னை தலை வணங்குகிறேன்
மதுரையை நீ எரித்ததால்
உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...
ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ
நீயோ  எத்தனையோ உயிர்களை
இரக்கமின்றி கொன்றாயே
உன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையே
உன்னை விட்டு
மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றே
ஒரு வேளை
உத்தமனாய் அவன் இருந்திருந்தால்
உலகத்தையே அழித்திருப்பாயோ ???

பெண் என்றால் பேயும் இரங்குமே
இதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??
புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !
~ அன்புடன் யசோதா காந்த் ~

7 Responses
  1. புத்தகம் வேண்டுமானால் உனை புகழட்டும் எனக்கு உன்மேல் என்றென்றும் கோபம் .....முற்றிலும் உண்மை .....


  2. //பாலாசி (ஜி) தமிழன் குவைத்

    புத்தகம் வேண்டுமானால் உனை புகழட்டும் எனக்கு உன்மேல் என்றென்றும் கோபம் .....முற்றிலும் உண்மை ..... //

    நன்றி பாலாசி (ஜி) அவர்களே !


  3. suriyan Says:

    மாறுபட்ட கவிதை ..


  4. Ranioye Says:

    பத்தினி "பெண்" தான்
    பெண் மட்டும் தான்
    அவள் ..!
    மணிமேகலை போன்றொரு
    மாணிக்கத்தை
    மடியில் சுமந்திருந்தால்
    மதுரையை எரிக்கும்
    மனம் வருமா ??
    பெண் தான்
    தாயல்லவே அவள் ...!


  5. // suriyan
    October 12, 2011 5:59 PM

    மாறுபட்ட கவிதை .. //

    மனமார்ந்த நன்றி சூரியன் அவர்களே !


  6. // Ranioye
    October 13, 2011 4:13 AM

    பத்தினி "பெண்" தான்
    பெண் மட்டும் தான்
    அவள் ..!
    மணிமேகலை போன்றொரு
    மாணிக்கத்தை
    மடியில் சுமந்திருந்தால்
    மதுரையை எரிக்கும்
    மனம் வருமா ??
    பெண் தான்
    தாயல்லவே அவள் ...!//

    ஆமாம் தோழியே நானும் வழிமொழிகிறேன்
    மனமார்ந்த நன்றிகள் ராணி அவர்களே ...


  7. இதுமாதிரி உடைசல்கள்தான் இப்போதைய தேவை. வாழ்த்துக்கள். இன்னும் கொஞ்சம் செப்பனிட்டால் கவிதை மிக உசரத்திற்குப் போகும். மீண்டும் வாழ்த்துக்கள்.


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..