மழையே போய் விடு .....









அன்புள்ள மழைக்கு

தவம் செய்து கேட்டும்
 பொழிய மறுப்பாயே..

இன்றோ ...

பொழிந்தாய் ..பொழிகிறாய்
இன்னும்  பொழிவாயோ?

உன்னால் பள்ளங்களும் நிறைந்து
குளம் குட்டை ஆனதே

சாலைகள் மூழ்கி
போக்குவரத்து முடங்கி
வாகனங்கள் வெள்ளத்தில்
கப்பல்கள் போலானதே

ஆற்றோர வீதியோர  குடிசைகள்
இருந்த இடம் தெரியவில்லையே

விவசாயம் செய்த பயிர்களெல்லாம்
உயிரோடே அழிந்து போனதே

கிராமத்து பள்ளிக்கூடமும்
ஒழுக்கினால் மூடி கிடக்கிறதே

எங்க அப்பாவும் வேலையின்றி
வீட்டுக்குள் திணறுகிறாரே

முதல் மழையில் நனைந்ததால்
மூக்கும் ஒழுகி சளி பிடித்து ஆட்டுகிறதே


நீ வராவிட்டாலும் தொல்லை
வந்தாலும் தொல்லை

பெய்தது போதும் மழையே
வந்தவழியே போய்விடு
அன்புடன் சண்டையிடும் சண்டைக்காரி

~அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. Anonymous Says:

    என்ன இருந்தாலும் மழையை போய்விடச்சொல்வது சரியாகப்படவில்லை


  2. அண்ணாவின் கேள்விகளும்,கலைஞரின் துரோகமும் பதிவு இட்டுள்ளேன்! கருத்துரை வழங்கவும்!


  3. எளிமையான கவிதை - நீங்கள் மழைக்கு மட்டும்தானே சண்டைக்காரி?


  4. நன்றி ஓசூர் ராஜன் அவர்களே ..


  5. நன்றி விச்சு அவர்களே ...


  6. பெயர் வெளியிடாத நண்பருக்கும் நன்றி


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..