விவசாயம்







நம் பாரதநாட்டின்
முதுகெலும்பாம் விவசாயி
இன்று அவனுக்கும் வேலையில்லா  திண்டாட்டம்..
விவசாயிகள் அதிகமானதால் அல்ல ..
விவசாயம் இல்லாமல் போனதால்
செழிப்பாய் இருந்த கிராமங்களும்
இன்று நகரமாய் மாறும் முயற்சியில்
காடுகள் வெட்டி சமமாக்கி
வயல்வெளிகளை தரிசாக்கி
தரிசாக்கிய நிலங்களை காசாக்கி
விவசாயத்தை அழிக்க துடிக்கும் மக்கள்
ஆதரவாய் அரசாங்கமும் ..
இன்றோ காடு கரைகளும் வயல்வெளிகளும்
அடுக்கமாடிகளாய் கடைவீதிகளாய்..
துரிதமாய் சாகும் விவசாயம்
துடிதுடித்து குழியில் விழும் விவசாயியும்
இன்றே சேமித்து வைத்து விட்டேன்
எனது கணனியில் ..
வயல்வெளிகளையும் பயிர்வகைகளையும்
புகைப்படங்களாய்
அரிசி செடி எதுவென கேட்கும்
எதிர்கால என் தலைமுறைகளுக்காய்


~ அன்புடன் யசோதா காந்த் ~

5 Responses
  1. Anonymous Says:

    vivasaayaththai ninaikkumbothu varum azhugaiyai kadduppaduththa mudiyavillai thozhee....



  2. நன்றி நண்பர் அநோன்ய்மௌஸ்


  3. நன்றி நண்பர் தமிழ் தோட்டம் அவர்களே


  4. R.Gopi Says:

    கரெக்ட் யசோ...

    இனிவரும் காலங்களில் நாம் அரிசியை மியூஸியத்தில் தான் பார்ப்போம் போலிருக்கிறது....

    இருக்கும் மரங்கள் அனைத்தையும் வெட்டி சாய்த்ததில் ஒரு துளி மழையில்லை... வானம் பார்த்த பூமி, விவசாயமின்றி பங்களாக்கள் ஆனது...

    நல்ல சமூக அக்கறையோடு இந்த பதிவினை அருமையாக எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துகள் யசோ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..