நிலவு பெண்ணே .....





இவள் ஒரு ஏமாற்றுகாரி 
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும் 
என்னிடம் கண்ஜாடை காட்டி நிற்கிறாள் 
பகலெல்லாம் முக்காடு இட்டு கொண்டு 
இரவானால் மட்டும் முகம் காட்டுவாள் 
ஒரு திங்கள்கொருமுறை
சிணுங்கி மருகி தேய்கிறாள் 
பின் மெல்லமாய் வளர்ந்து 
ஒளிவீசி மிளிர்கிறாள் ..
என்னை ராப்பாடியாய் 
ராகம் பாடவைத்து 
மேகதிரையில் மறைந்து 
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறாள் 
நான் மோகமாய் பார்ப்பதை கண்டு 
மௌனமாய் சிரிக்கிறாள் ...
என்று தான் நானும்
நிலவு பெண்ணே ..உன்னோடு 
பொன் நிலாகாலத்தில் 
உலா வருவேனோ ..
~ அன்புடன் யசோதாகாந்த் ~

6 Responses
  1. கொஞ்சும்
    அஞ்சுகமாய்
    மிஞ்சும் மேகவீதியில்
    பஞ்சமிர்த பொன்குடத்தில்
    மஞ்சமிட்டுத் தவழும்
    செஞ்சோலைப் பொன்னிலவே....!!!
    என்னையும் எழுத்துண்டிவிட்டீர்கள் மகிழ்ச்சி அம்மா....!!!
    - உங்கள் புதல்வன் வேலு


  2. tnk u thoorikai kuzhu....and my son velu


  3. manoarvi Says:

    உங்கள் கவிதைகளின் வரிகள்
    எல்லோரையும் வசீகரிக்கும் " காந்த
    அலைகள்...."

    உங்கள் பெயர் இனிமேல்
    யசோத காந்த் அல்ல..
    யசோத காந்தம்....

    என்றும் அன்புடன்
    மனோகரன்


  4. நன்றி மனோகரன் அவர்களே


  5. அருமை...

    கவிதைகள் அருமை

    வலைத்தளம் அருமை

    இதில் வரும் பாடல்கள் அருமை..

    வலைத்தளம் அலங்காரம் இன்னும் அருமை...

    அருமைகள்..எல்லாம்...ஒன்று கூடி..கிரீடம் சூட்டிக்கொண்டது உங்களிடம்....


  6. அருமை...

    கவிதைகள் அருமை

    // வலைத்தளம் அருமை
    இதில் வரும் பாடல்கள் அருமை..
    வலைத்தளம் அலங்காரம் இன்னும் அருமை...
    அருமைகள்..எல்லாம்...ஒன்று கூடி..கிரீடம் சூட்டிக்கொண்டது உங்களிடம்....//

    நன்றி இளங்கோவன் அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..