விடியாத கனவு .......


கண் மூடி கிடந்தேன் 
கண்டேன் ஒரு புது உலகம் 
ஜொலிக்கும் ஒரு பெரும் நகரம் 
அங்கே ஜாதி இல்லை 
ஏற்ற தாழ்வு இல்லை 
ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கம் இல்லை 
அங்கே எல்லோரும் மன்னர்கள் 
மதிப்புமிக்க மனிதர்களாக 
போட்டி பொறாமை இல்லை ...
அனைவருக்கும் ஒரே உணவு 
ஒரே ஆடை  ஒரே ஊதியம் 
பெண்களெல்லாம் தேவதைகளாக 
குழந்தைகளோ தேவகுமரர்களாக 
ஊரெங்கும் தோரணம் 
காணுமிடமெல்லாம் விழாக்கோலம் 
வானத்திற்கும் பூமிக்கும் 
வாசல்படியும் அழகிய ஏணிபடியும்
கண்திறக்க மனமில்லை..
கனவிலாவது இவ்வதிசயங்கள் 
தொடரட்டும் என்று .......
~ அன்புடன் யசோதாகாந்த் ~

6 Responses
  1. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் யசோதா


  2. நன்றி தோழர் கவியழகன் ,,அவர்களே


  3. R.Gopi Says:

    ஆஹா...

    உங்களுடன் நானும் அந்த அருமையான கனவுலகில் இணைந்தேனே யசோ...

    புத்தம் புது பூமி வேண்டும்
    நித்தம் ஒரு வானம் வேண்டும்..
    தங்க மழை பெய்ய வேண்டும்
    தமிழில் குயில் பாட வேண்டும்...

    யசோ... உங்கள் கனவு மெய்ப்பட வேண்டும்...


  4. Yazhini Says:

    அருமையான சிந்தனை !

    வாழ்த்துக்கள் சகோ .... !


  5. நன்றி சகோ ,,கோபி


  6. நன்றி யாழினி அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..