வங்கி ...





வங்கியில் பணமெடுத்து
வரும் வழியில்
எதேச்சையாய்
ஒவ்வொரு பணத்தினையும்
முகர்ந்து பார்த்தேன் ..
ஒன்றிலுமே வாசனை இல்லை ..

வங்கியின் வாசல் காணாத
அன்னை தரும் பணத்தில்
வாசம் மட்டும் வசமாக குடி இருந்தது ..

மல்லி ஜீரக  கடுகு டப்பாக்கள் தான்
அன்னை பணத்திற்கு  வங்கியாய் இருந்தது
அவள் கைகளில் புழங்கிய பணத்திற்கும்
வாசனையை  விதவிதமான வாரி தந்தது ..

இன்று என் கைகளிலோ
வாசனை இல்லா
சலவைத்தாள்களாக பணம் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. அன்னை கொடுக்கும் பணத்தில் வாசனையுடன் அன்பு கருணை பாசமும் இருக்கும்...

    அதை தற்போதை வங்கி சலவை நோட்டுகளில் கிடைப்பது கடினம்..

    அழகிய கவிதை...


  2. 50 பாளோயர்ஸ் பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்..


  3. நன்றி சௌந்தர் அவர்களே ....


  4. நல்லா இருக்கு பாஸ்,,,


  5. ஐயம் தி 51-வது ஃபளோயர்


  6. நன்றி ஆர் .ஷண்முகம் அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..