கடிதம் ...



( வலையும் தொலைபேசியும் வேண்டாமே   )

சொல்ல வந்த கதைகளை
சொல்லி முடித்தேன் கடிதத்தில்
மெல்லமாய் எச்சில் தொட்டு
செல்லமாய் ஒட்டினேன்  தபால் தலையை
என் எச்சில் நனைத்து ஒட்டிய கடிதத்தை
நீரும் எச்சில் துணையோடு தான் பிரிப்பீரோ  ??
நேரில் பகரும் முத்தத்தை  இருவரும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்டோமோ ?..

தபால் காரன் வரும் வழி பார்த்து
தவம் கிடக்கிறதே கண்கள் இரண்டும்
பதில் கடிதம் வரும்வரைக்கும்
வேலைகள் எல்லாம் வீணாக  கிடக்கிறதே
கடிதம் கண்ணில் கண்ட பின் தான்
மனமும் சொல் பேச்சு கேட்கிறதே  ...

கடிதம் சொல்லும் வரிகள் எல்லாம்
என் காதில் உமது குரலாய் ஒலிக்கிறதே ..
கொஞ்சலும் மிஞ்சலும் தொடர்கிறதே
வஞ்சி நான் உம்பதிலை வாசித்தபின்பும் ..
இரவெல்லாம் உறக்கம் வரும் வரைக்கும்
கடிதத்துடன் அல்லவா கதை சொல்கிறேன் ...
கடிதமும் என் கதை கேட்பதை கண்டு
கண் அயர்ந்து  உறங்கி போகிறேன் ..
விடியும் நாளை புது பொழுதில்
விவரங்களை சொல்ல
விரிவாய் மற்றொரு  கடிதம் எழுத
மனதில் எண்ண அலைகள்
எழுர்ச்சி கொண்டு அடிக்கிறதே ..
தொடரும் இந்த தபால் உறவுகள்
துடிப்புடன் நன்றாய் தொடரட்டுமே ..

~ அன்புடன்  யசோதா காந்த் ~

6 Responses
  1. eraeravi Says:

    கவிதைகள் மிக நன்று .பாராட்டுக்கள்
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!


  2. நன்றி ஹைக்கூ கவிஞர் இரா .இரவி - அவர்களே


  3. Anonymous Says:

    கடிதம் காலவரையின்றி இருக்கும்
    நம் மனதின் மலரும் நினைவுகளாக..
    உங்களது கடிதம் கவிதை அருமை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்


  4. // Anonymous
    October 9, 2011 8:36 AM

    கடிதம் காலவரையின்றி இருக்கும்
    நம் மனதின் மலரும் நினைவுகளாக..
    உங்களது கடிதம் கவிதை அருமை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் //

    நன்றி Anonymous !


  5. Unknown Says:

    முகவரியெழுதாமல் எழுதிய
    இதய ராகத்தில் இத்தனை
    இனிமைகளா?அழகு!
    நான் அனுப்பாமல்வைத்த
    ஆயிரம் கடிதங்கள் இன்னும்
    முகவரியின்றி காகிதமாய்!
    கற்பனையும் கவிதையும்
    களை கட்டுகிறது..தொடரட்டும்!


  6. நன்றி சகோ சேகர் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..