போதிமரம் .....






நாட்டிலோ பலவகை மரங்கள்
போதிமரத்திற்கோ புனித கதைகள்
புத்தி வந்து ஆசைகள் களைந்தார் 
புத்த பெருமான்

போதிமரம் தான் காரணம் என்றால்
ஆயிரமாயிரம் புத்தர்கள் எங்கே ??
மரம் ஒன்றும் காரணமில்லை
மனம் ஒன்றே காரணமாய்...

பெண் மண் ஆசை
பொன் பொருள் ஆசை
இவைகள் இல்லா மனிதனும் இல்லை
ஆசைகள் துறக்க போதிமரம் தான்
வேண்டுமென்பதில்லை..

என்றோ ஒருவன் புத்தன் ஆனான்
போதிமரமும் புனிதமாயிற்றே
புத்தனுக்கு ஆசை இல்லை என்று யார் சொன்னது ??
ஆசைகளை துறக்கும் ஆசை இருந்ததால் தானே
புத்தனும் துறவி ஆனான் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

10 Responses
  1. 'மரம் ஒன்றும் காரணமில்லை, மனம் ஒன்றே காரணமாய்..'அருமையான வரிகள்.


  2. வித்தியாசமான சிந்தனை
    அழகான அருமையான படைப்பு
    தங்களைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    த.ம 2


  3. // 'மரம் ஒன்றும் காரணமில்லை, மனம் ஒன்றே காரணமாய்..'அருமையான வரிகள். //

    மனமார்ந்த நன்றி விச்சு அவர்களே !


  4. // Ramani
    October 13, 2011 4:16 AM

    வித்தியாசமான சிந்தனை
    அழகான அருமையான படைப்பு
    தங்களைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    த.ம 2 //

    மனமார்ந்த நன்றி ரமணி அவர்களே


  5. sangakavi Says:

    வணக்கம்...

    இந்த வாரம் எனது அஞ்சறைப்பெட்டியில் உங்களை அறிமுகம் செய்துள்ளேன்... நேரம் இருப்பின் பார்க்கவும்...

    http://yashothakanth.blogspot.com/2011/10/blog-post_12.html


  6. //sangakavi
    October 14, 2011 9:32 AM

    வணக்கம்...

    இந்த வாரம் எனது அஞ்சறைப்பெட்டியில் உங்களை அறிமுகம் செய்துள்ளேன்... நேரம் இருப்பின் பார்க்கவும்...

    http://yashothakanth.blogspot.com/2011/10/blog-post_12.html ..// நன்றிகள் சங்கவி அவர்களே !


  7. G.BALAN Says:

    பு‌த்‌தனுக்‌கு போ‌தி‌ மரத்‌தடி‌யி‌ல்‌ போ‌தனை‌‌ கி‌டை‌த்‌தா‌ம்‌.
    நம்‌ம யசோ‌தா‌வு‌க்‌கு பு‌த்‌தி‌மதி‌ சொ‌ன்‌னது யா‌ரோ‌?
    நண்‌பன்‌ பா‌லன்‌


  8. // G.BALAN FILM PRO,
    October 24, 2011 7:25 AM

    பு‌த்‌தனுக்‌கு போ‌தி‌ மரத்‌தடி‌யி‌ல்‌ போ‌தனை‌‌ கி‌டை‌த்‌தா‌ம்‌.
    நம்‌ம யசோ‌தா‌வு‌க்‌கு பு‌த்‌தி‌மதி‌ சொ‌ன்‌னது யா‌ரோ‌?
    நண்‌பன்‌ பா‌லன்‌ //

    நன்றி பாலன் .


  9. eraeravi Says:

    நல்ல கவிதை பாராட்டுக்கள்
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி
    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    http://www.noolulagam.com/product/?pid=6802#response

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க
    கண் தானம் செய்வோம் !!


  10. நன்றி சகோ இரா இரவி ..அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..