இரயில் தண்டவாளம்.............




இரவும் பகலும் இருவரும்
மழையிலும் வெயிலிலும்
பனியிலும் குளிரிலும்
புயலிலும் பூகம்பத்திலும்
நூற்றாண்டுகளாய்
நெடுந்தூர பயணம்
ஒருநொடி கூட  விலகாமல்   
இத்தனை இருந்தும்
கை கோர்க்க(சேர்க்க) முடியாமல்
தனி தனியே ...நாங்கள்  
~அன்புடன் யசோதா காந்த்~

8 Responses
  1. கைகோர்க்க முடியாமல் போனாலும்
    ஒரு நல்ல கவிதை வர காரணமாய்
    இருந்தமைக்கு தண்டவாளத்திற்கும்
    அதைக் கொடுத்த உங்களுக்கும்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.


  2. //கைகோர்க்க முடியாமல் போனாலும்
    ஒரு நல்ல கவிதை வர காரணமாய்
    இருந்தமைக்கு தண்டவாளத்திற்கும்
    அதைக் கொடுத்த உங்களுக்கும்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள். //

    நன்றி ரமணி அவர்களே


  3. இணையா இருகொடுகளை
    இயம்பி வந்த இயல்பான கவிதை.
    தாம் இணையாது போனாலும் தன்னில்
    பயணிப்போரை இணைத்து வைக்கும்
    தன்மை வாய்ந்தது.

    அழகிய கவிதை சகோதரி.


  4. கைக்கோர்க்கும் ஜங்க்சனில்.... சோ நோ பிராப்ளம்...


  5. Anonymous Says:

    இறுதிவரை இணையாத இருகோடுகள்.....இந்த தண்டவாளங்கள்
    உங்களது இரவும் பகலும்... கவிதை அருமை..
    அன்புடன் பாஸ்கரன்


  6. // மகேந்திரன்
    October 15, 2011 2:04 AM

    இணையா இருகொடுகளை
    இயம்பி வந்த இயல்பான கவிதை.
    தாம் இணையாது போனாலும் தன்னில்
    பயணிப்போரை இணைத்து வைக்கும்
    தன்மை வாய்ந்தது.

    அழகிய கவிதை சகோதரி..// மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!


  7. // மாய உலகம்
    October 15, 2011 8:22 AM

    கைக்கோர்க்கும் ஜங்க்சனில்.... சோ நோ பிராப்ளம்...//

    மனமார்ந்த நன்றி மாய உலகம் அவர்களே !


  8. // Anonymous
    October 15, 2011 6:36 PM

    இறுதிவரை இணையாத இருகோடுகள்.....இந்த தண்டவாளங்கள்
    உங்களது இரவும் பகலும்... கவிதை அருமை..
    அன்புடன் பாஸ்கரன் //

    மனமார்ந்த நன்றிகள் பாஸ்கரன் அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..