ஆயுள் கைதி................

 
 
 
 
 
காளை ஒருவனை கண்டேன்
கண்ட அவனோ  கள்வன்
கோபம் நான்  கொண்டதால்

விழிகள் எனும் சிறைக்குள்
வீழ்த்தி தண்டித்தேன் ...

அவனும் என் தீர்ப்பறிய

நெஞ்செனும் சிறைகூட்டில் விழுந்தான்
என் காதலையே ஆயுள் தண்டனையாய்
நான் தீர்ப்பெழுத
நானும் கள்வனின் காதலி ஆனேன் ...

விரும்பியே நானும்
அவன் மடியில்விழ
அவனோ
தன் பரந்த தோள்களில்

விரிந்த மார்பினில்  அணைத்துகொண்டான்
ஆயுள் கைதியாய் ...
இருவரும் காதல் சிறைக்குள்

இந்த ஜென்மம் தீர்ப்போம் ..

~அன்புடன் யசோதாகாந்த் ~

9 Responses


  1. இணைதலும் இணைதல் நிமித்தமும்
    கவிதை அருமை சகோதரி.



  2. //!* வேடந்தாங்கல் - கருன் *!
    October 15, 2011 1:30 PM

    அசத்தல் கவிதை... //

    மனமார்ந்த நன்றிகள் வேடந்தாங்கல் கருன் அவர்களே !


  3. // ஆர்.சண்முகம்
    October 15, 2011 1:49 PM

    அருமை,,,//

    மனமார்ந்த நன்றி ஆர்.சண்முகம் அவர்களே !


  4. //மகேந்திரன்
    October 15, 2011 9:17 PM

    இணைதலும் இணைதல் நிமித்தமும்
    கவிதை அருமை சகோதரி. //

    மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !


  5. // மகேந்திரன்
    October 15, 2011 9:18 PM

    தமிழ்மணம் 2// ??


  6. Anonymous Says:

    இருவரும் காதல் சிறைக்குள்
    இந்த யென்மம் தீருங்கள்! வாழ்க!.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..