கோவில் திருவிழா ....









உள்ளூர் அம்மன்கோவில் திருவிழா
ஊர் மக்களோ ஆர்ப்பாட்டமாய்
பெண்களெல்லாம்  பூச்சூடி பொங்கல் வைக்க
சிறுவர்களோ ராட்டினம் சுற்ற..

இளவட்டங்களும்,முதுவட்டங்களும்
கரகாட்டம் ,ஒயிலாட்டம் வேடிக்கை பார்க்க
வயதான பெண்களோ வில்லுப்பாட்டும் ,,
கதைகளும் கேட்டு இருக்க
கெடா கறி விருந்திற்காய் 
உறவுமுறைகள்  காத்திருக்க

ஒலிபெருக்கியில்
வரி பணத்திற்காய் யாரோ குரல்கொடுக்க
பரபரப்பாய் ,,கோலாகலமாய் கொண்டாட

அமைதியாய் கண்மூடி தழை அசைபோட்டன
பூசாரிக்காய்  காத்திருக்கும்  நேர்ச்சை கெடாக்கள் !

~அன்புடன் யசோதா காந்த்~

5 Responses

  1. // சங்கவி
    October 17, 2011 12:44 PM

    Very Good Lines.....//

    மனமார்ந்த நன்றி தோழி சங்கவி !


  2. அப்படியே கிராமங்களின் பக்கம் போய்
    திருவிழா பார்த்து வந்தது போல இருந்தது
    மேளச் சத்தம் இல்லாத குறைதான்...
    அருமையா இருந்தது சகோதரி ...


  3. R.Gopi Says:

    கெடா வெட்டியாச்சா ??

    //மனமார்ந்த நன்றி தோழி சங்கவி//

    தோழான்னு சொல்லுங்க யசோ...

    இந்த சங்கவி பெண்ணல்ல....


  4. // மகேந்திரன்
    October 17, 2011 11:09 PM

    அப்படியே கிராமங்களின் பக்கம் போய்
    திருவிழா பார்த்து வந்தது போல இருந்தது
    மேளச் சத்தம் இல்லாத குறைதான்...
    அருமையா இருந்தது சகோதரி ...//

    மிக்க நன்றி சகோதரரே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..