எனக்குள் ஒரு தேடல்.....



வாழ்கையில் அவசர ஓட்டத்தின் நடுவில்
வாழ்ந்ததையும் தேடலாய்
தேடல் எ
ன்பதா ? ஆசை என்பதா ?
தீராத ஏக்கம் என்பதா ?
கண்கள் மூடி கிடக்கும் நேரம்
பின்னோக்கியே ஓடும் மனம் ..

ஆரம்ப பள்ளியின் ஆசிரியர் முகங்கள்
ஒன்றாய் திரிந்த தோழர்களின் முகங்கள்
உறுதி கொண்டேன்....எனக்குள்
நாளை முதல்
ன்று சேர்க்கவேண்டும்
ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ...

வாழ்பவர் எத்தனை பேரோ
மறைந்தவர் எத்தனை பேரோ
இல்லை மறந்தவர்தான் எத்தனை பேரோ
முகங்கள் தெரியா பெயர்கள்
பெயர்கள் தெரியா  முகங்கள்
இன்றும் நினைவில்...

தேடுதல் வேட்கை தொடரும்
புகை படங்களையும் ..அவர்களையும்
அந்த இனிய நாட்களையும் ....

~அன்புடன் யசோதா காந்த் ~

8 Responses
  1. நெஞ்சை இனிக்கச் செய்யும் ஒரு தேடல்..
    தேடல் என்றும் நிற்காத ஒன்று..
    போகும் வழியில் பள்ளியில் நம்முடன் படித்த
    நட்புகளை கண்டால் மனம் எவ்வளவு பூரிக்கும்..
    அது போன்ற ஒரு உணர்வை தந்தது உங்கள் கவி.
    நல்லா இருக்கு சகோதரி.


  2. மனம் எதையாவது தேடி கொண்டே தான் இருக்கும்.
    அருமையான நினைவுகள்...


  3. உங்களை அடிக்கடி முக நூலில் பார்த்திருக்கிறேன்.


  4. //மகேந்திரன்
    October 18, 2011 2:10 PM

    நெஞ்சை இனிக்கச் செய்யும் ஒரு தேடல்..
    தேடல் என்றும் நிற்காத ஒன்று..
    போகும் வழியில் பள்ளியில் நம்முடன் படித்த
    நட்புகளை கண்டால் மனம் எவ்வளவு பூரிக்கும்..
    அது போன்ற ஒரு உணர்வை தந்தது உங்கள் கவி.
    நல்லா இருக்கு சகோதரி.//
    மனமார்ந்த நன்றிகள் சகோதர் !


  5. / சண்முகம்
    October 18, 2011 4:46 PM

    மனம் எதையாவது தேடி கொண்டே தான் இருக்கும்.
    அருமையான நினைவுகள்.../

    மனமார்ந்த நன்றிகள் சண்முகம் !


  6. // சண்முகம்
    October 18, 2011 4:49 PM

    உங்களை அடிக்கடி முக நூலில் பார்த்திருக்கிறேன்.//

    என்னை அல்ல என் எழுத்துக்களை பார்த்திருப்பீர்கள்
    சண்முகம் அவர்களே .


  7. இனிமையான தேடல் ....நெஞ்சை இனிக்க செய்த தேடல் .....


  8. // பாலாசி (ஜி) தமிழன் குவைத்
    October 19, 2011 1:21 PM

    இனிமையான தேடல் ....நெஞ்சை இனிக்க செய்த தேடல் .....//

    மனமார்ந்த நன்றிகள் பாலாசி (ஜி) தமிழன் குவைத் அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..