வாடகை வீடுகள் ......



சரியோ ?தவறோ?தெரியவில்லை
மனதின் வலிகளை மறைக்கவில்லை 

நல்லதும் கண்டேனே தீயதும் கண்டேனே
விவரங்கள் அறிந்த நாள் முதலாய்
 
சொந்தமென்று சொல்ல ஒரு வீடு இல்லை
அவ்வப்போது சொந்தமாய்
வாடகை வீடுகள்தானே...

மாறி மாறி குடி கொண்டோம்
வீடுகளை மட்டுமல்ல
கல்விகூடங்களையும்தானே 

புது புது மனிதர்கள் அறிமுகமாய்
நண்பர்கள் கூட்டம் தாராளமாய்..
 
தடைகளோ எங்களுக்கு ...
வாழும் வாழ்கையிலும்
வசிக்கும் வீடுகளிலும்..
.
சுவரில் ஆணி அடிக்க தடை
பத்து மணிக்கு மேல்
விளக்கு எரிக்க தடை 

உரக்க பேசி சிரிக்க தடை
சொந்த பந்தங்கள் வருவதிலும் தடை 

வாளி தண்ணீர் ஒன்றுக்கு மேல்
குளிக்க தடை 

சில தடைகளை சொல்வதற்கே
எனக்குள் வெட்க தடை...

சரியாய் வாடகை பணம் கொடுத்தும் நாங்கள்
ஏனோ ஆனோம் நிரந்தர அடிமைகள்
ஒவ்வொரு வாடகை வீடுகளிலும் ..

~ அன்புடன் யசோதா காந்த் ~

5 Responses
  1. வாடகை வீட்டில் வசிப்போரின்
    அவலங்களையும், சுதந்திரமற்ற தன்மையையும்
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.


  2. வாடகை வீடுகள்...
    வகை இல்லாத வீடு
    வாகை இல்லாத வீடும்...


  3. // அருள்
    October 19, 2011 2:32 PM

    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html //

    நன்றி அருள் அவர்களே !


  4. // மகேந்திரன்
    October 20, 2011 5:14 AM

    வாடகை வீட்டில் வசிப்போரின்
    அவலங்களையும், சுதந்திரமற்ற தன்மையையும்
    அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி.//

    மனமார்ந்த நன்றிகள் அன்பு சகோதரரே !


  5. // Thanjai Vasan (தஞ்சை.வாசன்)
    October 21, 2011 10:15 AM

    வாடகை வீடுகள்...
    வகை இல்லாத வீடு
    வாகை இல்லாத வீடும்...//

    உண்மை .. மனமார்ந்த நன்றிகள் தஞ்சை வாசன் அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..