வானம் ....





நீ எங்கள் பூமி வீட்டின் கூரையல்லவா

உலக நாடுகளை இணைக்கும் பாலமல்லவா

இயற்கை தனை அள்ளி தரும் வாசலல்லவா

இரவு பகலை உணர்த்தும் கடிக்காரமல்லவா
பறவைகளின் விளையாட்டு மைதானமல்லவா


உனை பாடாத கவிஞனும் உண்டோ
வானவில்லில் வர்ணம் காட்டி
வசியம் செய்யும் வல்லபனே

இரவில் உன் அழகை காண
இறைவனும் இறங்கி வருவானே ...


அழகை அள்ளி தெளித்து
நட்சத்திர கோலமிட்டு
திருஷ்டி படாமலிருக்க
நிலவை பொட்டாக்கி...
ஒ வானமே உன்னை
என்னவென்று வர்ணிப்பேன்


~யசோதா காந்த் ~

8 Responses
  1. கவிதை அருமை


  2. வேய்கூரை வானத்திற்கு
    அழகிய கவி.
    நன்று சகோதரி.


  3. வானம் என்றே அழையுங்கள்...


  4. வானம் இன்னும் அழகனாது உங்கள் கவி வரிகளோடு இணைந்து ...


  5. //சண்முகம்
    October 20, 2011 4:49 AM

    கவிதை அருமை //

    மனமார்ந்த நன்றிகள் சண்முகம் அவர்களே !


  6. //மகேந்திரன்
    October 20, 2011 5:12 AM

    வேய்கூரை வானத்திற்கு
    அழகிய கவி.
    நன்று சகோதரி.//

    மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !


  7. // மாய உலகம்
    October 21, 2011 10:58 AM

    வானம் என்றே அழையுங்கள்...//

    மனமார்ந்த நன்றிகள் மாய உலகம் அவர்களே !


  8. // நட்புடன் ஜமால்
    October 21, 2011 2:15 PM

    வானம் இன்னும் அழகனாது உங்கள் கவி வரிகளோடு இணைந்து ...// மனமார்ந்த நன்றிகள் நட்புடன் ஜமால் !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..