நாடோடி ...................


பழக்கடை முதல்
பல கடைகளிலும்
குளிர்ந்தும் வியர்த்தும் 
குறைவின்றி இருந்தேன்  ..

அன்றொருநாள்
பெரியவர்  வாங்கிய பலசரக்கோடு
அடைக்கலமானேன் 
அழையா விருந்தாளியாய் அடுப்படியில் ..
நிம்மதி நீடிக்கவில்லை 
அன்றே  அகதியானேன்
குப்பைத்தொட்டியில் தொடங்கி
அன்றிரவே ஆற்றங்கரை ஓரத்தில் ..

விடியவே இல்லை
வேகமாய் வந்த பெருங்காற்றில் 
பறந்தேன்  பறவை போல் பெருமிதத்தில் .
முடிவு  எங்கோ என நினைத்து
முடியும் முன்  விழுந்தேன்
முள்வேலி ஒன்றில் ...

படபடத்து சிக்கி தவிக்கிறேன்
கொஞ்சம் காயங்களுடன்
நான் மட்டுமல்ல 
அகதிகள் பலர்  என்னைப்போல
விடிவிப்பார் எவருமின்றி 
தொங்கிக்கொண்டு...

இப்படிக்கு
அழிவே இல்லாத பாலிதீன் பை ..



~ அன்புடன் யசோதா காந்த் ~


4 Responses
  1. Unknown Says:

    அகதிக்கு மண்ணில் இடம் தேவை....
    நெகிழிக்கு மண்ணில் இடம் தேவையில்லை....


  2. // சுரேஷ்
    November 1, 2011 1:23 PM

    அகதிக்கு மண்ணில் இடம் தேவை....
    நெகிழிக்கு மண்ணில் இடம் தேவையில்லை....//

    மனமார்ந்த நன்றிகள் சுரேஷ் அவர்களே


  3. இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம் சகோதரி..
    அருமையான தலைப்பை கையில் எடுத்திருக்கிறீர்கள் .
    நெகிழியின் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க
    முயற்சி எடுக்க வேண்டும்....
    நெகிழியையும் அகதிகளையும் இணைத்துச் சொன்னமை
    அருமை.

    கவி நன்று சகோதரி..


  4. // மகேந்திரன்
    November 1, 2011 8:12 PM

    இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம் சகோதரி..
    அருமையான தலைப்பை கையில் எடுத்திருக்கிறீர்கள் .
    நெகிழியின் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க
    முயற்சி எடுக்க வேண்டும்....
    நெகிழியையும் அகதிகளையும் இணைத்துச் சொன்னமை
    அருமை.

    கவி நன்று சகோதரி..// மனம்மார்ந்த நன்றிகள் சகோதரரே .. கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல எழுத முயற்சிக்கிறேன் ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..