பஞ்சம் பசி ...



மண்ணிற்கும் விலையுண்டே
இந்த மனித உயிர்க்கு விலையுண்டா?

குடல் காய்ந்து கருகவா
குடிசையில் பிறந்தோம் ?

மண்ணையும் தின்று பார்த்தோமே
மறுபடியும் பசிக்கிறதே ...

நாடு வளம் பெறுமோ தெரியவில்லையே
ஆனால் எங்களின் சவக்குழிகள் கண்முன் தெரிகிறதே ...

தசைகள் இன்றி தோலும்தான் சுருங்கி போனதே ..
உடலெலும்புகளோ புறம்  ஆனதே ..

முகம்வடிவிழந்து மனித உருவம் மறைகிறதே
வேறேதோ வேற்றுகிரகவாசிபோலானோமே..

~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. வறுமையின் கோரபி பிடி கவிதையிலும் படத்திலும் தெரிக்கிறது...

    பசியில்லாத உலகம் இல்லாதவரை மனிதம் போற்றப்படாது...
    வல்லரசுகள் இருந்தும் இந்த கொடுமை உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

    படம் மனதை ஏதோ செய்கிறது..


  2. 'உலகில்
    வாழ்வதுதான் கடினம்
    இறப்பது மிகச் சுலபம்.'

    கவிதை நன்று!


  3. நன்றி கவிதைவீதி \சௌந்தர் அவர்களே ...


  4. நன்றி தோழன் மபா \தமிழன் வீதி அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..