அரசாங்க வேலை ....




அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு
அல்லும் பகலும் கஷ்டப்பட்டு

ஓடி ஓடி தேர்வு எழுதி
கனவுக்குள் கோட்டை கட்டி

சுப்பையா கூப்பிட்டான்
சுண்ணாம்பு அடிக்க

கண்னையா அழைத்தான்
காட்டு வேலை செய்ய

மிராசுதாரும் கூப்பிட்டார்
அரிசி ஆலையில் மேற்பார்வை பார்க்க

தரகர் மாமா ஆலோசனையோ
தங்கமா ஒரு பெண்ணை கைபிடிக்க

வேண்டாம்னு ஒதுக்கி வச்சேன்
மேற்படி சொன்ன எல்லாவற்றையும்

அப்பாவும் என்னை பேரு மறந்து
ஆசையா கூப்பிட்டாறு தண்ட சோறு  என்று


அம்மாவும் வெட்டிப்பயல் நீ என்று
வாய் நிறைய  வசைபாடுவாள்


வேலைவாய்ப்பு அலுவலகம்  படைகள்எடுத்தும்
விண்ணப்பங்களும் கால்செருப்பும் வீணாய் போனதே

கூலிவேலை செய்ய தடைபோடும்
பட்டம் படிச்ச தலைக்கன இருளுக்கு
எந்த விளக்காலும்
வெளிச்சம் தர முடியலையே .. 
~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. வேலையில்லா இளைஞர்களின் வாழ்க்கை சோகமானது.


  2. அருமை..கடைசி வரி நெத்தியடி..


  3. // விச்சு
    December 9, 2011 2:28 PM

    வேலையில்லா இளைஞர்களின் வாழ்க்கை சோகமானது.//

    மனமார்ந்த நன்றி விச்சு அவர்களே .உண்மை தான் வேலை இல்லா திண்டாட்டம் மிக கொடுமையானது ..


  4. சம்பத் குமார்
    December 9, 2011 2:37 PM

    அருமை..கடைசி வரி நெத்தியடி..//

    மனமார்ந்த நன்றிகள் சம்பத் குமார் அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..