என் உயிர் நண்பனே ...





நண்பனே உன்னை வணங்குகிறேன்
நாளும் நீ வாழ வாழ்த்திடுவேன் 

அந்நிய அரபு தேசத்திலே
அடிமை வாழ்வினிடையே
அறிமுகமானேன் உன்னுடனே ...


அறியா மொழி பேசுவோர் நடுவினிலே
தாய் மொழியாம்
தமிழ் மொழி நம்மை சேர்த்ததே

என்ன தவம் நான் செய்தேனோ
உன்னை தோழனாய்  அடைந்ததிலே
உன் அருகாமை  என்னில் கிடைத்ததிலே
உலகே என் கைகளில் என உணர்ந்தேனே

என் இன்ப  துன்ப வேளையினிலே
நீ என் தெய்வம் என்றுணர்ந்தேனே
என்று தீர்ப்பேனோ இக்கடனை
நட்புக்கோர் இலக்கணமானாயே



வாயால் சொல்லி தீராதே
நீ செய்த நன்மைகளே
காவியம் படைக்க முயல்கின்றேன்
கருணை கொண்ட உன் மனதை


எதிரிகள் ஆயிரம் வந்திடினும் 
உன் துணையால்  வென்றிடுவேனே 
வாழிய வாழிய வாழியவே
என் உயிர் நண்பன் என்றென்றும் நீ
வாழியவே

~`அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. உயிர் நண்பனுக்கான உன்னத கவிதை
    அருமையிலும் அருமை
    மனக் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    tha.ma 2


  2. உணர்வு பூர்வமான கவிதை வரிகள்! வாழ்த்துக்கள் யசோதா!


    உண்மைவிரும்பி.
    மும்பை.


  3. அருமையான வரிகள்


  4. நன்றி ரமணி அவர்களே ..


  5. நன்றி உண்மை விரும்பி அவர்களே ..


  6. நன்றி சசிகலா அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..