சாதி ....











ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள்  கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர்  அல்லவா?

அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?

இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?

அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை

பாரதி கண்ட கனவு
பாரதத்தில்  பலிகட்டுமே

உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..

அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்

சாதி என்ற பெயரில்  அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்

வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..


~அன்புடன் யசோதா காந்த் ~

10 Responses
  1. Vishnu... Says:

    அழகிய கவிதை அன்பின் யஷோதா .. ஜாதி கொடுமை இந்த நூற்றாண்டிலும் தீராதது மிக பெரிய கொடுமையே .. தொடர்ந்து எழுத வாழ்த்துக்களோடு ...

    அன்புடன்
    விஷ்ணு


  2. இரட்டைக்குவளை முறை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறதா?


  3. Unknown Says:

    ம் ம் மிகவும் அழகான அருமையான கவிதை.
    உரைப்பவர்களுக்கு உரைத்து உணர்ந்தால் நலமே



  4. வணக்கம்!
    பாரதியின் கனவும் உங்கள் ஆவேசமான கவித்துவ வரிகளும் நிறைவேறட்டும்.


  5. நன்றி எனதன்பின் விஷ்ணு அவர்களே ...


  6. நன்றி துரை டானியல் அவர்களே ....இன்னும் சில கிராமபுறங்களில் இருக்கிறது ..துரை டானியல் அவர்களே


  7. நன்றி கரிகாலன் அவர்களே ..


  8. நன்றி மதுரை சரவணன் அவர்களே ...


  9. நன்றி தி தமிழ் இளங்கோ அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..