முத்து மாமா ...,,,














முந்திரி தோப்பில்
முந்தானைய இழுத்த
என் முத்து மாமா
உன் முத்து சிரிப்பில்
முற்றும் தொலைத்தேன்
என் செல்ல மாமா

உன் அக்கா மகள்
என் அன்பு உனக்குத்தான்
முத்து மாமா
நீ கள்ள தனமாய்
கண்டு ரசிப்பது ஏன்
என் தங்க மாமா

கோயில் குளம்
 வேண்டி நிக்கிறேன்
என் முத்து மாமா
நீ வேண்டாதனம் 
செய்ய துடிப்பதேன்
என் கண்ணு மாமா

ஜாதி சனம் முன்
உன் தாலிக்காய் தலை குனிவேன்
என் முத்துமாமா
நீ தன்னந்தனியாய்
நின்னு தவிப்பதேன்
என் சின்ன மாமா

வைகாசி மாசம்
பந்தல் போடணும்
என் முத்து மாமா
நீ வேலி அடைத்து
வெள்ளாமை  தொடங்கு
என் ஆசை மாமா

ஆடி மாசம்
அம்மா கூப்பிடுவா
என் முத்து மாமா
நீ அங்கே இங்கே நின்னு முழிப்ப
என் அழகு மாமா

நம்ம பேரு விளங்க
பிள்ளைகள் வளரும்
என் முத்து மாமா
நம்ம காலம் முழுவதும்
இன்ப கதை சொல்லுவோம்
என் வீர மாமா

~அன்புடன் யசோதா காந்த் ~

9 Responses
  1. கொடுத்துவைச்ச முத்து மாமா
    இப்படி அன்பான அனபைச் சொல்லத் தெரிந்த
    முறைப் பெண் கிடைப்பதென்றால் சும்மாவா ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்


  2. arasan Says:

    ம்ம்ம் .. நல்லா இருக்குங்க கவிதை ..
    கிராமத்து பெண்ணின் மனதை அப்படியே வரிகளில் படம் பிடித்து விட்டிர்கள் ..
    வாழ்த்துக்கள்




  3. நன்றி ரமணி அவர்களே ...


  4. நன்றி அரசன் சே அவர்களே ..


  5. நன்றி ராஜன் நெல்லை அவர்களே ...


  6. Bala Says:

    கள்ளமில்லாத அன்பின் மொழிகள். எதார்த்தத்தின் உச்சமாய் இனிமை ததும்பும் இதம். காலம் முழுதும் கதை சொல்லும் முத்து தோழி. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...


  7. நன்றி பாலா அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..