மலடி ...






மலடி ...
************
ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டுக்கொரு மகப்பேறு
அளவில்லா பூரிப்பும்
எல்லையில்லா ஆனந்தமும் ..

பிள்ளைகள் வளரும் அழகை
ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள்
விளையாட்டு பொருட்களையோ
பொக்கிசமாய் பாதுகாத்தாள்..

சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை
சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள்

பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும்
பால் கொடுத்த முலைகளும் ..
கருவை வளர்த்த கருவறையும்
மகிழ்ந்து ...கொண்டாடியது ...

மலடியாகவே இருந்திருக்கலாமே என
மனம் கசந்தாள் ..
அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை
அடைந்த போது ....

~ அன்புடன் யசோதா ..~

11 Responses
  1. அனுப்பியவர்கள் விரைவில் இங்கு வரட்டும்...


  2. Anonymous Says:

    ஹ்ம்ம்ம்ம்... அருமை அருமை..!


  3. Anonymous Says:

    தமிழ்மணத்தில் என் பதிவை எவ்வாறு புதுபிப்பது என கூறுங்களேன் சகோ.

    தமிழ்மணப் பதிவுப்பட்டை கிடைத்தாலும்.. அதில் கிளிக் செய்யும்போது Error வருது.

    எனது வலைபதிவு jeshwatamiltamil.blogspot.in
    இதில் (.com ) இல்லாமல் (.in) என்று இருப்பதாலா?


  4. Unknown Says:

    Very good poet,
    Thanks


  5. நன்றி திண்டுகல் தனபால் அவர்களே...


  6. நன்றி ஜெஷ்வா அவர்களே ...


  7. நன்றி அசோக்குமார் கலியபெருமாள் அவர்களே ....


  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...


  9. Deva sundaram Says:

    Very nice


  10. Deva sundaram Says:

    Very nice


  11. நன்றி என் பள்ளி கால தோழனே ... தேவ சுந்தரம்


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..