மலர்களே...


பூக்களுக்குள்ளும்
*******************
மயக்குகிறேன் நறுமணத்தால்
கொஞ்சலுடன் .. மல்லிகை பூ

வசீகரிகிறேன் என் நிறத்தால் ..
செல்லமாய் கனகாம்பரம் பூ

மரியாதையும் சிறப்பும்
அழகும் எனக்கே எனக்கே ....
கர்வத்துடன் .. ரோஜா பூ

பூஜைக்காய் பிறந்தவள் நான் ....
அழகாய் அரளிபூ

வாடாமல் வாழ்வேன் நான் ...
வாதிட்டது வாடாமல்லி பூ

அபூர்வ வாசனை என்னுடையது ...
மயக்கத்துடன் மரிகொளுந்து

அலங்கரிப்பதே எங்கள் வேலை ...
சாமர்த்தியமாய் ..
சாமந்தி ..செவ்வந்தி பூக்கள்

ஏழூரும் வீசும் என் வாசம் ..
பொறாமையோடு பிச்சி பூ

என்றுமே அழகாய் நாங்கள் ...
ஏக்கத்தோடு காகிதபூக்கள்

மந்திர வாசனை எனக்கே ....
சிணுங்கலோடு மனோரஞ்சிதம் பூ

பல நிறங்களில்..நாங்கள் .....
கொஞ்சலோடு டிசம்பர் பூக்கள்

பனிரெண்டு வருடத்துக்கு
ஒருமுறை பூப்பவள் நான் ...
கோபத்தோடு குறிஞ்சு பூ

மேலும் மேலும் ........பலபூக்கள்
முடிவில்லை விடையில்லை...
தொடரும் போட்டிகள்
பூக்களுக்குள்ளும் ....
~ அன்புடன் யசோதா காந்த் ~ 



4 Responses
  1. Vishnu... Says:

    கவிதை அருமை யசோதா .. !
    அன்புடன்
    விஷ்ணு ...


  2. நன்றி அருமை அன்பு நண்பர் விஷ்ணு அவர்களே ...


  3. R.Gopi Says:

    அழகு பூக்கள் அனைத்தையும் ஒன்று கோர்த்து அருமையான மாலையாக்கிய யசோவிற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்....

    எப்படி யசோ இப்படியெல்லாம்?


  4. நன்றி நண்பர் கோபி அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..