மார்கழி பனி .






அதிகாலை இங்கு வந்து
பவள முத்துக்களை விதைத்தது யார்?
அள்ளி பொருக்க மனம் ஆசை படுகிறதே
துள்ளி நடக்கும் பாதங்களில்
சின்னதாய் குளிர் சுகம் பரவுகிறதே ...
புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்
தலை குளித்து முடித்த பின்
தலை துவட்ட மறந்தனவோ?
கதிரவன் வருவான் ..
தலை காய்த்து விடுவான் என
வானம் நோக்கி ...நேரம் பார்த்து ...
காத்திருக்கின்றனவோ?
நானும் கண் மூடி காத்திருக்கிறேன்
கதிரவனின் கணைகளாய்
எனை அணைக்கும் காதலனை
எதிர் நோக்கி ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

11 Responses
  1. KDNL Says:

    புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்
    தலை குளித்து முடித்த பின்
    தலை துவட்ட மறந்தனவோ?

    அருமையான ''மார்கழி'' கற்பனை...

    By, KDNL...


  2. R.Gopi Says:

    ஆஹா... கவிதையின் ஒவ்வொரு வரியிலும் காதல் பொங்கி வழியுதே யசோ...

    ரொம்ப நல்லா இருக்கு...

    இன்னும் நிறைய எழுதுங்க....


  3. நன்றி நண்பர் தங்கல்


  4. நன்றி நண்பர் கோபி அவர்களே


  5. Anonymous Says:

    Wowwwwww.... ரொம்ப நல்லா இருக்கு...
    Preethi


  6. Preeti Says:

    Wowww .... ரொம்ப நல்லா இருக்கு...
    Preethi


  7. Preeti Says:

    Wowwwwww...ரொம்ப நல்லா இருக்கு...


  8. Preeti Says:

    Wow.. ரொம்ப நல்லா இருக்கு...



  9. எனக்கோ மார்கழியை நினைய்கவே பயமாயிருகிறது. மார்கழியில் பனியை பார்த்து சலித்து போன மனதுக்கு உங்கள் கவிதை இனிமையை தருகிறது.



எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..