வயோதிகம் .....












வாலிபத்தின் கடைசி நாட்களாய்
கடந்தவைகளை திருப்பிப்பார்க்கும் தருணமாய்
ஊன்றுகோலே மூன்றாம் காலாய்
பகைவனை கூட நண்பன் ஆக்கும் பக்குவமாய்
மனம் தெளிந்த நீரோடையாய்
நல்லவைகள் மட்டும் நாடும் குணமாய்
ஆசைகளை துறந்து ஞானியாய்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடாய்
அன்பு மட்டுமே தாரக மந்திரமாய்
ஆதரவை நாடும் அப்பாவியாய்
இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய்
மழலை மனதின் மொத்த உருவமாய்
வயோதிகம் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. வயோதிகத்தை எடுத்துரைக்கும் மிகவும் அருமையான கவிதை.


  2. Anonymous Says:

    nalla natpai naadum nanbanaai......
    utra thunai enni yaenkum nenjamaai...

    arumai yasothaa...
    (puduvai raja)


  3. நன்றி பனித்துளி சங்கர் அவர்களே


  4. நன்றி புதுவை ராஜா ..அவர்களே


  5. RAJAN NELLAI Says:

    இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய்
    மழலை மனதின் மொத்த உருவமாய்
    வயோதிகம் .
    arumai............


  6. நன்றி நண்பர் ராஜன் நெல்லை அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..