தேடல் .....


ஒன்றாம் வகுப்பில் கிடைத்த சிலேட்டு
இரண்டாம் வகுப்பில் தொலைத்த பென்சில்
மூன்றாம் வகுப்பில் கிடைத்த நோட் புக்
நான்காம் வகுப்பில் தொலைத்த பேனா
ஐந்தாம் வகுப்பில்  கிடைத்த ஜாமன்ட்றி பாக்ஸ்
ஆறாம் வகுப்பில் தொலைத்த கட்டுரை நோட்
ஏழாம் வகுப்பில் கிடைத்த லீடர் பதவி
எட்டாம் வகுப்பில் தொலைத்த புது வாட்ச்
ஒன்பதாம் வகுப்பில் கிடைத்த உயிர் தோழி
பத்தாம் வகுப்பில் தொலைத்த ஹால் டிக்கட்
பதினொன்னாம்  வகுப்பில் கிடைத்த லவ் லெட்டர்
பனிரெண்டாம் வகுப்பில் தொலைத்த பள்ளி வாழ்க்கை
கல்லூரி  போன பின்பும் ஞாபகத்தில்..

கல்யாணம் ஆன  பின்போ
கிடைத்ததையும் தொலைத்ததையும்
தொலைந்து போய் தேடுகிறேன்
இன்று வரை...

~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

10 Responses
 1. RAJAN NELLAI Says:

  கல்யாணம் ஆன பின்போ
  கிடைத்ததையும் தொலைத்ததையும்
  தொலைந்து போய் தேடுகிறேன்
  இன்று வரை...super...........


 2. நன்றி நண்பர் ராஜன் நெல்லை அவர்களே


 3. Vishnu... Says:

  கடைசி வரிகள் அருமை யசோதா !
  கல்யாணம் ஆன பின்போ
  கிடைத்ததையும் தொலைத்ததையும்
  தொலைந்து போய் தேடுகிறேன்
  இன்று வரை....

  வாழ்த்துக்களுடன்
  விஷ்ணு .. 4. R.Gopi Says:

  //கல்யாணம் ஆன பின்போ
  கிடைத்ததையும் தொலைத்ததையும்
  தொலைந்து போய் தேடுகிறேன்
  இன்று வரை...//

  ஆஹா... பதிவின் கடைசி வரிகளில் வந்த அந்த பஞ்ச், சூப்பர்...

  நல்லா எழுதி இருக்கீங்க யசோ... நிறைய பேர் இப்படி தான்.... 5. manoarvi Says:

  இளமை கால நினைவுகள்
  " படகென்று " கண்ணீர்
  வரவழைத்த வரிகள் ....

  நன்றி யசோத..

  என்றும் அன்புடன்
  மனோகரன்


 6. manoarvi Says:

  இளமை கால நினைவுகள்
  " படகென்று " கண்ணீர்
  வரவழைத்த வரிகள் ....

  நன்றி யசோத..

  என்றும் அன்புடன்
  மனோகரன் 7. நன்றி ஸ்டார்ஜன் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..