ராணுவ வீரன் ..




நல்லதொரு வைகாசி மாதமொன்றில்
நல்ல நேரம் கூடிய பொழுதினில்
வீரமிகு ஆண்மகன் கைகள்தனில்
மூன்று முடிச்சு வாங்கிக்கொண்டேன் கழுத்தினில் ..

தீடீரென அழைப்பு வந்ததில்
புறப்பட்டு சென்றான் சடுதியில்
வீரன் அவன் வேலையோ ராணுவத்தினில்
பிரியா விடைகொடுத்தேன் மௌனத்தில் ...

நான் நடந்து போகின்ற வீதிதனில்
வீரன் மனைவி என கேட்கும் வாழ்த்துதனில்
என் மனமோ பிரிவை மறந்து பெருமிதத்தில்
அவனுடன் சேர்ந்திடுவேன் மற்றொரு பொழுதுதனில்
சாய்ந்திடுவேன் வீரனவன் மார்புதனில்
நாட்டுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல ஆனந்தத்தில்
வளர்ந்திடுவர் வீரமாய் பாரத தாயின் தாலாட்டுதனில் ..
~ அன்புடன் யசோதா காந்த்  ~

4 Responses
  1. தேசப்பற்று மேலோங்கிய
    பிரிவின் துயரை துச்சமாக்கும்
    உணர்வுள்ள கவிதை.
    அருமை சகோதரி.


  2. நாடுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல

    நல்ல எண்ணம் - அருமைங்க


  3. // மகேந்திரன்
    October 24, 2011 4:51 AM

    தேசப்பற்று மேலோங்கிய
    பிரிவின் துயரை துச்சமாக்கும்
    உணர்வுள்ள கவிதை.
    அருமை சகோதரி...//

    மனமார்ந்த நன்றிகள் அன்பு சகோதரரே !


  4. // நட்புடன் ஜமால்
    October 24, 2011 8:09 PM

    நாடுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல

    நல்ல எண்ணம் - அருமைங்க//

    உங்கள் முதல் வருகைக்கு
    மனமார்ந்த நன்றிகள் ..
    பின்னூட்ட திலகமே
    அடிக்கடி வந்து கருத்துக்களை சொல்லுங்கள் நண்பரே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..