காற்று...............



காற்றே உன் முகங்கள் எத்தனை ?
நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???


சில்லென்றுசெல்லமாய்  வீசி
என்னை குளிர செய்கிறாய் ...

  தாலாட்டி மெல்லமாய் வீசி ...
திண்ணையில் தாத்தாவை  உறங்க செய்கிறாய் ...

மிதமாய் மோகமாய்  வீசி
பூக்களை தலை ஆட்டி சிரிக்க செய்கிறாய் ...

தட தட  சப்தமாய் வீசி
தொட்டிலில் இருக்கும் குழந்தையை அழ செய்கிறாய் ...

சட்டென்று வேகமாய் வீசி
பாவம் கோழிக்கூட்டின் கதவை உடைக்கிறாய் ...

சுழலாய் சுருண்டு வீசி
புழக்கடையில் கழுவ  கிடக்கும்
பாத்திரங்களை  பறந்திட செய்கிறாய் ...

புயலாய் கோபமாய்  வீசி
முற்றத்து தென்னை மரத்தை சாய்த்தே  விட்டாய் ...

சூறாவளியாய் பாய்ந்து வீசி
எங்க வீட்டு மேல் கூரையை தூக்கி செல்கிறாய் ...

புழுதி கற்றாய் குப்பையாய்  வீசி
சுவாசிக்கும் சுவாசத்தை தடை செய்கிறாய் ..

ஆனால் இறைவனை போல
பிராண வாயு வாக இருந்து
எங்களை உயிர் வாழசெயகிறாய் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. அழகிய நடை
    சித்திரமாய் வார்த்தைகள்..
    கவி நன்று சகோதரி.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்



  2. மாலனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
    காற்று ஆணா பெண்ணா என அவரது வரிகள் மறக்க இயலாதவை


  3. மகேந்திரன்
    October 26, 2011 4:51 AM

    //அழகிய நடை
    சித்திரமாய் வார்த்தைகள்..
    கவி நன்று சகோதரி.


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்//


    அன்பான பாராட்டுக்கு நன்றிகளும்
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும்
    அன்பு சகோதரரே !


  4. // சண்முகம்
    October 26, 2011 5:31 AM

    புயல்.//

    மனமார்ந்த நன்றிகள் சண்முகம் அவர்களே !


  5. // எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
    October 27, 2011 5:08 PM

    மாலனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
    காற்று ஆணா பெண்ணா என அவரது வரிகள் மறக்க இயலாதவை //

    மனமார்ந்த நன்றிகள் எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் அவர்களே !
    உண்மை தான் நண்பரே அவரது கவிதை ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..