விரைவில் வந்துவிடு ...




சாணம் தெளித்து கோலமிடும் முற்றம்
பூஜைக்காய் தினம் பறிக்கும் செம்பருத்தி


முற்றத்து முல்லை பூக்கள்
நீ பரிமாறி முதல் உணவு உண்ணும் காக்கை


ஓடி பிடித்து மாலையில் நீ அடைக்கும் கோழி குஞ்சுகள்
ஈர கூந்தலில் நீ சுற்றும் துளசி மாடம்


ஓயாமல் அமர்ந்தாடும் மர ஊஞ்சல்
நம் வீட்டு மாமரத்தில் வந்தமரும் கிளி கூட்டம்

உன் கதைகள் தினம் கேட்கும் சமையலறை
உன் கைகளோடு கைகலப்பு செய்யும் பாத்திரபண்டங்கள்

இவைகளும் என் போல் தவிக்கின்றன
மகபேறுக்காய் உன் தாய் வீடு நீ சென்றதை அறியாமல்

~அன்புடன் யசோதா காந்த் ~

11 Responses
  1. தவிப்பிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தர மழலையோடு வருவால் காத்திருக்க சொல்லுங்கள் அருமை


  2. Anonymous Says:

    ''..இவைகளும் என்போலத் தவிக்கின்றன...''..வரிகள் உண்மையாக உள்ளன. வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com


  3. நன்றி சசிகலா அவர்களே


  4. நன்றி கோவைகவி அவர்களே


  5. அருமையோ அருமை எனதன்பான சகோதரியே... அன்றாடம் தொடர் நிகழ்வாய் நம்மை சுற்றி நம்மால் நிகழும் நிகழ்வுகளை என்றுமே மறக்க முடியாத ஒன்றாய் நம் ஆழ்மனதில் பதிந்துவிடும்... அத்தகைய பசுமையான நிகழ்வுகளை நாம் பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும்போது நம் மனது சொல்லெனா துயரத்தை அனுபவிக்கும்... ஆனால் இங்கோ எனதன்பின் சகோதரி யசோதாவோ அந்த இயற்கையே நீ இல்லாமல் வருந்தி தவிப்பதாக இங்கு அழகு பட தமிழால் தீட்டியிருக்கிறார்...
    என்ன ஒரு யாருக்கும் எண்ணத்தில் உதயமாகா ஓர் ஆழ்ந்த இயற்கையான இயற்கையை பற்றிய சிந்தனை... மனமார பாராட்டுகிறேன் எனது பாசமிகு சகோதரி யசோதா காந்த் அவர்களை...


  6. அருமையோ அருமை எனதன்பான சகோதரியே... அன்றாடம் தொடர் நிகழ்வாய் நம்மை சுற்றி நம்மால் நிகழும் நிகழ்வுகளை என்றுமே மறக்க முடியாத ஒன்றாய் நம் ஆழ்மனதில் பதிந்துவிடும்... அத்தகைய பசுமையான நிகழ்வுகளை நாம் பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும்போது நம் மனது சொல்லெனா துயரத்தை அனுபவிக்கும்... ஆனால் இங்கோ எனதன்பின் சகோதரி யசோதாவோ அந்த இயற்கையே நீ இல்லாமல் வருந்தி தவிப்பதாக இங்கு அழகு பட தமிழால் தீட்டியிருக்கிறார்...
    என்ன ஒரு யாருக்கும் எண்ணத்தில் உதயமாகா ஓர் ஆழ்ந்த இயற்கையான இயற்கையை பற்றிய சிந்தனை... மனமார பாராட்டுகிறேன் எனது பாசமிகு சகோதரி யசோதா காந்த் அவர்களை...


  7. Admin Says:

    வந்துவிட்டேன்..வாசித்துவிட்டேன்..தவிப்பு-சிறப்பு..


  8. நன்றி வேதா அக்கா ,,,


  9. நன்றி தேவாதி ராஜன் அண்ணா ...


  10. நன்றி சகோ ,,மதுமதி அவர்களே ,,,


  11. Unknown Says:

    ரொம்பவும் அழகு.


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..