திருமண நாள் ...









இன்று ஏனோ
புதிதாய் கவிதைகள்
ஒன்றும் வரைய வில்லை
என் திருமண நாள் என்பதாலோ
மனம் பின்னோக்கி பறந்தது
என் வாலிப வயதும்
என் கணவரை காதலித்ததும்
காதலில் நாங்கள் மகிழ்ந்ததும்
பெற்றோரை எதிர்த்து
திருமணம் செய்ய துணிந்ததும்
என்னவரின் உறவினர்கள்
கலந்து ஆலோசித்தபின்
ஊரறிய திருமணம் ஆனதும்
எல்லாம் நேற்று நடந்தது போல்
ஓடிவிட்டது ..
முத்தான பதினேழு வருடங்கள்
அழகாய் இரண்டு குழந்தை செல்வங்களும்
நன்றி இறைவா
நாளும் நான் மறவேன்
வணங்குகிறேன்
வாழ்த்துங்கள் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

16 Responses
  1. இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்...
    இன்று போல் என்றும் அன்போடு இருக்க வாழ்த்துகள்...


  2. Almighty Add Says:

    இறைவன் நமக்கு கொடுத்த அருமையான வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நாள் என்றால் அது திருமண நாள். அதிலும் காதலித்து மணம் புரிந்தவர் என்றால் இன்னும் சிறப்பு. இன்னும் பல திருமண நாட்களை காண வாழ்த்துகிறேன்.


  3. நன்றி சௌந்தர் அவர்களே ...


  4. நன்றி எஸ் கௌதம் அவர்களே ...


  5. Happy wedding anniversary.... www.rishvan.com


  6. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்


  7. Anonymous Says:

    Best Wishes...


    http://sivaparkavi.wordpress.com/
    sivaparkavi


  8. திருமணநாள் வாழ்த்துக்கள் தோழி!


  9. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி!



    உண்மைவிரும்பி,
    மும்பை.


  10. என்ன ஒரு ஒற்றுமை எனக்கும் எழுத தோன்ற வில்லை இன்று தான் என் திருமண நாளும் அருமை தோழி வாழ்த்துக்கள்


  11. நன்றி ரமணி அவர்களே ..


  12. நன்றி சிவபார்கவி அவர்களே ...


  13. நன்றி கவிப்ரியன் அவர்களே ...


  14. நன்றி ரிஷ்வன் அவர்களே ...


  15. நன்றி உண்மைவிரும்பி அவர்களே..


  16. வாழ்த்துக்கள் தோழி சசிகலா அவர்களே நன்றி ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..