விழிகளே ....






எனது விழிகளே ....
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை மறைத்து கொள்ளுங்களேன்


காதல் தோல்வியால் துவண்டதையும்
கவலைகள் என்னை கலக்கியதையும்
பயம் எனும் பேய் பாடாய் படுத்தியதையும்
  பிரிவுகள் பல வந்து பித்தாய் அலைந்ததையும் 

யாரும் அறியாது உள்ளுக்குள் உருகுவதையும்
விழிகள் நீங்கள்  அறிவிப்பதேனோ ?
 
வலிகள் பலவகை  வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்

விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

12 Responses
  1. தங்கள் வேண்டுகோள் நியாயமானதே
    அனைவருக்குமானதே
    இமைக் கதவுகளை மூடித் தொலைத்தால் ஒழிய
    அனைத்தையும் அப்படியேஅல்லவா சொல்லித் தொலைக்கிறது
    வித்தியாசமான சிந்தனை
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்



  2. வலிகள் பல வருவினும் விழிநீர் வடிக்காதீர்கள்.
    இது பிடிக்கும். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com


  3. Vetha ELangathilakam நன்றி அன்பு அருமை சகோதரி..


  4. நன்றி ரமணி அவர்களே ..


  5. காதல் தோற்பதேயில்லை ...

    ஆஹா! விழிகளுக்கோர் வேண்டுகோள் - அருமை ...


  6. நன்றி நட்புடன் ஜமால் அவர்களே ..


  7. Vishnu... Says:

    நல்ல கவிதை அன்பின் யஷோ ..
    மனதின் கண்ணாடி முகம் என்றால்
    முகத்தின் எதிரொலி விழிகள் அல்லவா ..

    அன்புடன்
    விஷ்ணு ..


  8. நன்றி அன்பின் விஷ்ணு அவர்களே ...


  9. நன்றி அன்பின் விஷ்ணு ..அவர்களே ,,


  10. Unknown Says:

    கனவுகளை கற்பனைகளை,
    கோபங்களைத் தாபங்களை,
    இன்பங்களைத் துயரங்களை,
    கண்ணீராய் கரையவிடாதே,
    கவிதைகளாய் மலரச்செய்!
    வாழ்த்துக்கள்!!


  11. நன்றி சகோ சேகர் அவர்களே ,,,


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..