அன்புள்ள அம்மாவுக்கு ....









அம்மா உன்னை பார்க்க ஆசை
காதலின் வேகத்தில்
உன்னை மறந்தேனே
நானே தாயானபோதோ 
தவறுகளை உணர்ந்தேனே

என்னை விழிக்குள் 
வைத்தல்லவா நீ வளர்த்தாய்
எனக்கு பிடித்த உணவுகளையல்லவா
பார்த்து பார்த்து சமைத்தாய்

ஒரு நிமிடம் உன்னை மறந்து
என்னவர் பின் நடந்தேனே
உன்னை பிரிந்த பின்னும் 
ஒவ்வொரு நொடியும்
என் நினைவே நீயானாயே

உந்தன் வலியை எந்தன்
மகபேறு தன்னில் உணர்ந்தேனே
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா
நீ வேண்டும் அம்மா மீண்டும் எனக்கு
நான் குழந்தையாய் மாறி
உன் புடவை தலைப்பால் 
முகம் மறைத்து விளையாட

நீ தலை தடவ உன் மடிமீதுறங்க
உன் கன்னம் உரசி முத்தமிட
என் இன்ப காலம் இனியும் வேண்டும்
அழைக்கிறேன் என் அன்பு அன்னையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. Admin Says:

    பகை பாராட்டி மணம் முடித்தவர்களின் மனத்திரையில் ஓடும் விசயத்தை கவிதையாக்கியிருக்கிறீர்கள்.ஆம் தாயாகும் போதுதான் தாயின் நிலை தெரிகிறது உண்மையே..


  2. Vishnu... Says:

    அழகிய கவிதை அன்பின் யஷோ ..


  3. நன்றி சகோ மதுமதி அவர்களே


  4. நன்றி எனதன்பின் விஷ்ணு அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..