அறிவுரை ...



 
மூத்தோர் சொல்கேட்ப்போம்
முக்கனிகளாய் இனிப்போம்
முழுமையாய் பயனடைவோம்

ஆன்றோர்களின் அறிவுரைகளோ
அறிவில் சிறக்க செய்திடுமே
ஆக்கம் பலபல  உருவாகுமே !

அறியா  வினாக்களுக்கெல்லாம்
பெரியோர்களன்றோ அகராதியாம்

இயற்கை வைத்தியங்களும்
இயற்கை  சீற்றங்களையும்
வியக்கும் வண்ணம் எடுத்துரைப்பாரன்றோ  !

வாழ்கையின் ரகசியங்களையும்
வகை அறிந்து உணர்த்திடுவாரன்றோ !
முதியோர் இல்லங்கள் ஒழியட்டும் 
அவர் நம் அன்பு பிணைப்பில் வாழட்டும்

முதியோர்களை போற்றுவோம்
முரண்பாடுகள் இன்றி வாழ்ந்திடுவோம்

~அன்புடன் யசோதா காந்த் ~

5 Responses
  1. கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன்...எப்படி உங்களால் கவிதை எழுத முடிகிறது. நான் ஒரு பக்கம் எழுதுவதற்குள் எனக்கு மூச்சு முட்டி விடுகிறது. நல்ல பள்ளியில், நல்லா ஆசிரியரிடம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். நல்ல மாணவியாகவும் இருந்திருப்பீர்கள்.

    மற்றுமொரு கேள்வி? கேக்கலாமா என்று தெரியவில்லை? இருந்தாலும் கேட்கிறேன். பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பெயர் "யசோதா காந்தில்," "காந்த்," காரணப் பெயறா? தெரிந்து கொள்ளலாமா?


  2. போற்றாமல் இருந்தாலும் பரவாயில்லை தூற்றி தூக்கி எரியாமல் இருந்தால் சரி .


  3. நன்றி நம்பள்கி அவர்களே ...நல்ல கேள்விதான் காந்த் என்பது என் கணவர் பெயர் ..


  4. நன்றி தோழி சசிகலா அவர்களே ...


  5. மிகவும் நல்ல சிந்தனை யஷோ.....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..