குரங்கு ...மனம் ...





மனம் ஒரு குரங்காய்
மரம் விட்டு மரம் தாவி
இருக்கும் இடம் நில்லாமல்
இல்லாதோர் ஒரு  இடம் தேடி
பறக்க நினைக்கும் பறவை போல்
இறகுகள் இன்றி உயர பறந்தே
முடியாத பாதைகளில்
முக்கி  முனங்கி நடைபோட
தெரிந்த விடைகளையும்
துருவி துருவி கேள்வி கேட்டும்
போதுமென்ற நிறைவு இன்றி
பொருளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு
நடக்காத ஒன்றை நடக்காதோ என்றெண்ணி
எட்டா கனி என்றறிந்தும்
நிம்மதி இழந்து தவிக்கும்
மனம் ஒரு குரங்கு அன்றோ ....


~அன்புடன் யசோதா காந்த்~ 

8 Responses


  1. நன்றி ராஜன் நெல்லை அவர்களே ...


  2. Admin Says:

    நிச்சயம் மனம் குரங்குதான்..சிறப்பு.


  3. //நடக்காத ஒன்றை நடக்காதோ என்றெண்ணி
    எட்டாக் கனி என்றறிந்தும்
    நிம்மதி இழந்து தவிக்கும்
    மனம் ஒரு குரங்கு அன்றோ//

    நிச்சயம் மனித மனம் ஒரு குரங்கேதான்.அதில் எந்தவித சந்தேகமுமில்லை சகோதரி.


  4. நன்றி மதுமதி அவர்களே ...


  5. நன்றி சித்தாரா மகேஷ் அவர்களே ...


  6. கால்களில்லாத குரங்குக்கு
    அருமையானக் கவிதை.
    வாழ்த்துக்கள் யசோதா!


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..