தமிழ் தாய் ....
தமிழ் தாய் ...
*********
ஆதியில் தோன்றினாள்
அழகிய மங்கையவள் ..

தெவிட்டாத இன்பம் தரும்
தெளி தேன் அமுதமும் அவள்

கல்லாதவரையும் கவி எழுத செய்யும்
காவிய தலைவி அவள் ..

அன்னை அவளை கற்றே
பட்டம் பெற்ற பண்டிதர் மேதைகள் பலர்

உணர்வுகளில் அன்பை ஊற்றி
ஓர் இனமாய் நம்மை சேர்ப்பாள்

எங்கோ நம்மிலோருவனுக்கு துன்பம் நேர்ந்திடினும்
உலகையே பதறி எழ செய்வாள்

தாயின் பெயரை நாமும் சூட்டி
அழைத்து மகிழ்வோம் பிள்ளை செல்வங்களை ..

.
செந்தமிழ் சொல்லெடுத்து ..
அழகாய் பாட்டு இசைத்து ..

தமிழ் தாய் அவளை ..
வணங்குவோம் வாரீர் வாரீர் ....
~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. அருமை.வாழ்த்துக்கள்


  2. நித்தமும் தொழவேண்டிய
    தமிழன்னைக்கு அழகிய பாடல் சகோதரி...


  3. நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே ....


  4. நன்றி அன்பு சகோ மகேந்திரன் அவர்களே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..