நீ நான் ...



பூவாய் நீ
அதில் புதைந்த மகரந்தமாய் நான்
மகரந்தமாய் நீ
அதில் மயங்கும் வண்டாய் நான் ..

கவிதையாய் நீ
அதில் கலந்த வரிகளாய் நான்
வரிகளாய் நீ
அதை வடித்த கவிஞனாய் நான்

வானவில்லாய் நீ
அதில் வண்ணங்களாய் நான்
வண்ணங்களாய் நீ
அதை தீண்டும் தூரிகைகளாய் நான்

கானங்களாய் நீ
அதில் கலந்த ராகங்களாய் நான்
ராகங்களாய் நீ
அதை இசைக்கும் ஒலிகளாய் நான் ..

புல்லாங்குழலாய் நீ
அதை மீட்டும் உதடுகளாய் நான்
உதடுகளாய் நீ
அதை மூடும் உதடுகளும் நான்

வாய்க்காலாய் நீ
அதன் வரப்போர செடிகளாய் நான்
செடிகளாய் நீ
அதன் உயிர் வேர்களாய் நான்

விழிகளாய் நீ
அதன் நடுவே கண்மணியாய் நான்
கண்மணியாய் நீ
அதை தாங்கும் வெண் திரையாய் நான்

மொழிகளாய் நீ
அதில் முதலாம் தமிழாய் நான்
தமிழாய் நீ
தமிழின் அமுதாய் நான்

 
~ அன்புடன் யசோதா காந்த் ~ 

3 Responses
  1. மிகப்பிரமாதமான கவிதை உங்களின் வரிகளில் மயக்கும் காந்த சக்தியிருக்கிறது பாராட்டுகள் வாழ்த்துகள் இன்னும் படைத்து பல புகளழைந்திட பிரார்த்தனைகள்


  2. http://www.chenaitamilulaa.net/ தங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இத்தளத்தில் இணைந்து அற்புதமான படைப்புகளான உங்கள் கவிதைகளைப்பகிருங்கள் நட்புடன் நலமடைந்து சிறந்திடலாம்


  3. நன்றி நேசமுடன் ஹசிம் அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..