சின்ன சின்ன ஆசை


மழையில் நனைந்து 
     துள்ளி  குதிக்க வேண்டும்
களிமண் பூசிக்கொண்டு
     வெயிலில் காய வேண்டும்
உயரமான மலைகளில்
     ஏறி இறங்க வேண்டும்
பனிக்கட்டியின் நடுவில்
     படுத்து உறங்க வேண்டும்
பூக்களின்  மத்தியில்
      புகைப்படம் எடுக்கவேண்டும்
பாக்கள் பல பாடி
       பரிசுகள் வாங்க வேண்டும்
வேகமாய் ஓடும் ஆற்றில்
       எதிர்   நீச்சல் போட வேண்டும்
முடிவே இல்லாத பாதையில்
        பயணம் போக வேண்டும்
ஒரு நாளேனும் நானும்
         முதல்வர் ஆகவேண்டும்
உறவே இல்லாத உயிர்கள் எல்லாம்
         என் சொந்தங்கள் ஆகவேண்டும்
கவலைகள் எதுவும் இன்றி வாழ் நாள்  முழுவதும் 
          சிரித்து மகிழ வேண்டும் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~   

5 Responses



  1. ஆசைகள்..அனைத்தும் அற்புதம்..

    முதல்வராக...ஏன்...இந்திய பிரதமரே கூட ஆகலாம்...ஆனால்..இன்றைய பிரதமரா..இல்லாமல்...இருக்க வாழ்த்துகின்றேன்


  2. // ஆசைகள்..அனைத்தும் அற்புதம்..

    முதல்வராக...ஏன்...இந்திய பிரதமரே கூட ஆகலாம்...ஆனால்..இன்றைய பிரதமரா..இல்லாமல்...இருக்க வாழ்த்துகின்றேன் //

    நன்றி இளங்கோவன் அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..