அனாதை


பிறக்கும் குழந்தைகள் எல்லாம் 
தவமாய் பிறந்தவர்களா ??
தண்டனையாய் பிறந்தவர்களா ??
எங்களை பெற்றவர்களை
எங்கோ தொலைத்து விட்டோம் ..
 
அள்ளி அணைக்க அன்னை இல்லை ...
அறிவை சொல்ல தந்தை இல்லை ..
கொஞ்சி மகிழ
உடன்பிறப்புகள் இல்லை ..
சொந்தமென்று சொல்ல
உறவுகளும் இல்லை ..
  
எனினும்
எங்களுக்குள் சில நல்ல விஷயங்கள்
ஜாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை ..
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள்  இல்லை
பொன்னுக்கும்  மண்ணுக்கும் ஆசை இல்லை
புன்னகைக்கு  குறைவில்லை என்றுமே எங்களுக்குள் ...
  
வாழ்க்கையை ஜெயிக்கும் போராட்டத்தோடு
அன்பெனும் ஆதரவை நாடும்
அனாதை விடுதியின்
ஆண்டவன் கைப்பிழைகள்  நாங்கள்................

~ அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. அருமையான பதிவு தோழி ....
    வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ..


  2. நன்றி நண்பர் தீண்டா மெளுகுகள்


  3. இறைவன் படைத்த உலகில் யாருமே அனாதைகள் இல்லை என்பது என் எண்ணம் சகோ..

    சொல்ல முடியாத வலிகளை தாங்கி நிற்கின்றன வரிகள்..

    அருமை


  4. சம்பத் குமார்
    December 9, 2011 2:36 PM

    இறைவன் படைத்த உலகில் யாருமே அனாதைகள் இல்லை என்பது என் எண்ணம் சகோ..

    சொல்ல முடியாத வலிகளை தாங்கி நிற்கின்றன வரிகள்..

    அருமை// மனமார்ந்த நன்றிகள் சகோ ..உண்மையே இறைவனின் படைப்பில் அனாதைகள் எவருமில்லை ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..