திரு நங்கைகள்




கடவுளுக்கோ குழப்பமாய்
தாய் தகப்பனுக்கோ
அவமான சின்னமாய்
உடன்பிறப்புகளுக்கோ கேலியாய்
உறவினர்களுக்கோ ...வேடிக்கையாய்
சமுதாயத்திற்கோ கேள்வியாய்
அரசாங்கத்துக்கோ தலைவலியாய்
எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய்
நாங்களும் மனிதர்கள் தானே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர்
மன்னராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள்
சீரியல் பார்த்து அழுவோர்களும்
இரங்க மனமில்லா எங்களிடம்
தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள்
வேறு யார் வந்துதான் நெஞ்சோரம் சாய்ப்பாரோ
தத்து எடுத்தோம் எங்களுக்குள் பல உறவுகளை
மனம் குமுறுகிறோம்
மனிதாபிமானம் என்றால் ??????????
~ அன்புடன்  யசோதா காந்த் ~

17 Responses
  1. மிக அருமையான நெகிழ்வான பதிவு


  2. திருநங்கைகளின் வலியை நறுக்கி வைத்தாற் போல் தெரிவித்துள்ளீர்கள்-- ஆழமான கவிதை - வாழ்த்துக்கள்- முதல் கவிதையே முத்திரையாய் உள்ளது..


  3. நன்றி நண்பர் சு .செந்தில் குமரன்


  4. நன்றி தோழர் பிரான்சிஸ்



  5. நல்ல தளம் , நல்ல படைப்பு ...தொடர்ந்து பதிவுசெய்யுங்கள். வாழ்த்துக்கள் !
    அன்புடன்
    சமரன்.


  6. Arunvetrivel Says:

    உன்மை நிலமையை கவிதையாக எழுதிய எங்கள் அன்பு அக்காவை மனமாற பாராட்டுகிரேன். கவிதை அருமையாக உள்ளது அக்கா.
    வாழ்க வளமுடன்.


  7. நன்றி நண்பர் ஜெயராம் அவர்களே


  8. சமரன் நன்றி வருகை தந்ததற்கு


  9. தம்பி அருண் வெற்றிவேல் ....நன்றி


  10. அருமையான பதிவு தோழி
    இப்போது எல்லாம் சமுகத்தை யாரும் திரும்பி பார்ப்பது இல்லை
    நீங்கள் எழுதி இருக்கும் விதம், பரட்டகுரியது ... அட அட என்னமா எழுதி இருக்கீங்க
    உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை தோழி எல்லாமே அருமை ...!
    வாழ்த்துக்கள் நன்றி... நன்றி...


  11. நன்றி நண்பர் ....கலா




  12. நல்லா இருக்குங்க அக்கா


  13. kirubarp Says:

    ஆத்துமா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை ! இந்த சரீரத்தில் நாம் இருப்பதால் ஆணாகவோ பெண்ணாகவோ நினைத்து கொண்டிருக்கிறோம் ! அதில் சரீர உணர்வுகள் மாறி இருப்பது ஒருவகையில் பிதுரார்ஜித கர்மாவினால் ! உலகம் அவர்களை கொடுமை செய்வதை விட அவர்கள் அவர்களுக்காக கொடுத்து கொள்ளும் தண்டனை அதிகம் ! அவர்கள் முதலாவது தங்களின் ஆத்துமா --நான் ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை என்பதை உணர்ந்து தங்களின் சரீர ஆளுகையிலிருந்து விடுபட முயலவேண்டும் ! தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ கருதிக்கொள்வதுவே அவர்கள் அவர்களுக்கு இளைத்து கொள்ளும் தண்டனை ! அந்த தண்டனையை தொடர்ந்தே சமூகம் அவர்களை கொடுமைப்படுத்த ஏதுவாகிறது ! அந்த சிந்தனையை கடந்து யோக நெறியில் நிலைத்தால் மற்றவர்களை காட்டிலும் விறைவில் ஆன்ம சாதனை பெறலாம் !

    மறுமையில் ஆண்,பெண் பேதங்கள் இறுக்கிறதா?
    http://godsprophetcenter.com/rich_text_9.html


  14. SIVAYOGI Says:

    பால் பேதம் கடந்து
    பக்குவம் அடைந்து ...
    பரிசுத்த நினைக்கு உயர
    பரமன் தந்த வரத்தை
    ஏன் ?
    பாழாக்கிக் கொள்கிறீர்கள் .....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..