முதிர்கன்னி ...


ஏழை வீட்டு மூத்த பெண்ணாய்
அழகே இல்லாத துர்பாக்கியவதியாய் நானும்
அழகாய் நான்கு தங்கைகளும் ..
என்னை பெண்பார்க்க வந்தவர்களுக்கோ
தங்கைகளை மணமுடிக்க ஆசை
உள்ளுக்குள் அழுதும் ..புறம்  சிரித்தும்
சம்மதம்  சொன்னேன் தங்கைகள் வாழ்விற்கு
என் வயது தோழிகளுக்கோ ....
பள்ளியிலும் இடுப்பிலும் வயிற்றிலும் குழந்தைகள்
இரண்டாம் மூன்றாம் தாரமாய் கூட
என்னை மணமுடிக்க வருவாரில்லையே
யாரை குத்தம்சொல்லுவது
என்னை பெத்த தாய் தந்தையினயோ
அழகாய் என்னை படைக்க மறந்த இறைவனையோ
ஆசைகளையும்  ஏக்கங்களையும்
எனக்குள் புதைத்து
இரவெல்லாம் கண்ணீரால் என் தலையணையை நனைத்து
மௌனமாய் அழுகிறேனே
முதிர் கன்னி நான் ...
~ அன்புடன்  யசோதா ~

9 Responses
  1. கண்களை ஈரமாக்கியது கனமான வரிகள் .....


  2. கண்களை ஈரமாக்கியது கனமான வரிகள் .....


  3. நன்றி .......தமிழன்வலை


  4. RAJAN NELLAI Says:

    அருமையான வரிகள் யசோத ,ஒரு ஒரு வரியும் கண்ணீரை வர வைக் கிறது, அருமையான சிந்தனை ,வாழ்த்துக்கள்! யசோ...........


  5. Anonymous Says:

    தரமான தாதியர் தொழில் செய்யும் தோழியே, இளமையிலும் முதுமை வரலாம் வியாதியால், முதுமையிலும் இளமை வரும் எண்ணத்தால், அழகுக்கு இலக்கணம், அழகுக்கு அளவு கோல் எது Marcis Remington


  6. RAJA. Says:

    இரண்டாம் மூன்றாம் தாரமாய் கூட
    என்னை மணமுடிக்க வருவாரில்லையே...........

    கண்களை ஈரமாக்கிய சிந்தனை..


  7. நன்றி நெல்லை ராஜன்



  8. தரமான தாதியர் தொழில் செய்யும் தோழியே, இளமையிலும் முதுமை வரலாம் வியாதியால், முதுமையிலும் இளமை வரும் எண்ணத்தால், அழகுக்கு இலக்கணம், அழகுக்கு அளவு கோல் எது Marcis Remington

    நன்றி நண்பரே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..