மழை



அது ஒரு மழை காலம்
குடையுடன் நான்
பேருந்து  நிழற்குடையின் கீழ்
அவள் வந்தாள் என் அருகில்!!!
கை கடிகாரம் பார்த்து
சண்டை போட்டாள் மழையிடம்!!!!
திடீரென திரும்பியது - அந்த
நனைந்த தேவதை -என்னை
மறந்தேன் அவள் பார்வையில்....
குடை நீட்டினேன் அவளிடம்
வாங்க மறுத்து முறைத்தாள் என்னிடம்
அவளுக்கு கோபம் மழை மீது
எனக்கோ காதல் மழை மீது
அவளோ மழை நின்றுபோக வேண்டினாள்
நானோ மழை நிற்க கூடாது என வேண்டினேன்
மழையிலும் வியர்த்தது எனக்கு......                                                        
~ அன்புடன்  யசோதா காந்த் ~

4 Responses
  1. R.Gopi Says:

    மழைக் காதலியை மிகவும் ரசித்தேன் யசோ...

    எப்படி தான் இப்படி எல்லாம் யோசிச்சு எழுதறீங்களோ!!

    உங்களுக்கு மழையும், காதலும் அவ்வளவு பிடிக்குமோ!!??



  2. Anonymous Says:

    மழையின் காதலியே!வாழ்த்துக்கள்.

    தமிழ் வளன்.


  3. நன்றி தோழர் தமிழ் வளன்


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..