பணம் ..

பணமே உன்னை வரம் என்பதா
இல்லை சாபம் என்பதா ..

சிலநாள் வாழ்கையில் வந்து வசந்தத்தை வீசுகிறாய்
பலநாள் வராமல் வறுமையில் வதக்கி எடுக்கிறாய்

பகலெல்லாம்   இரை  தேடும்
பறவையாய் அலைந்தும்
இரவாகியும் வீட்டை சேர மனமில்லை
ஏன் தெரியுமா ?

பிள்ளைகளின் தேவைகளை
தீர்க்கமுடியா பாவினானன்றோ
அவரின் முகம் காண மனமின்றி

பாதி இரவாகும் வரை காத்திருந்து
பிஞ்சு விழிகள் உறங்கும் எனத்தெரிந்தபின்னே

திருடனை போல பதுங்கி பதுங்கி
 வீட்டினுள் நுழைகிறேன் ....
கொஞ்சி மகிழும் தந்தை நான்  அஞ்சி நடுங்கி...

வறுமை நிழலவன்  என் கரம்பிடித்து நடக்கின்றான்
பணம் எனும் நல் நண்பன் கைபிடிக்கும் வரை
என்னைப்போல எத்தனைபேரோ தரணியில் ??????????



 ~ அன்புடன்  யசோதா ~

8 Responses
  1. RAJA. Says:

    ORU THAGAPANIN IYALAMAIYUM..,பிள்ளைகள் விழித்து விட கூடாதே என்ற BHAYAMUM THARIGIRATHU....


  2. நன்றி நண்பர் ராஜா அவர்களே


  3. என்னை பொறுத்த வரையில் பணத்திற்கும் , மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை எனதான் நினைக்கிறேன் . நன்கு சம்பாதித்தாலும் வாழத்தெரியாமல் வாழ்ந்தால் பணம் சாபம் தான் . ஆனால் கடைசி வரி என்னை மிகவும் அசைத்து விட்டது . ஆம் ... பிள்ளைகளுக்கு என்ன தெரியும் ....?


  4. ADMIN Says:

    யதார்த்தமான கவிதை.. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...!!

    குறிப்பாக கடைசி வரிகள் கவர்ந்துள்ளது..!

    நடுத்தர குடும்பங்களில் நிறைய தகப்பன்மார்களின் நிலமையும் இதுதான்..


  5. //உங்கள் நண்பன்
    October 28, 2011 4:00 PM

    என்னை பொறுத்த வரையில் பணத்திற்கும் , மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை எனதான் நினைக்கிறேன் . நன்கு சம்பாதித்தாலும் வாழத்தெரியாமல் வாழ்ந்தால் பணம் சாபம் தான் . ஆனால் கடைசி வரி என்னை மிகவும் அசைத்து விட்டது . ஆம் ... பிள்ளைகளுக்கு என்ன தெரியும் ....?//


    மனமார்ந்த நன்றிகள் உங்கள் நண்பன் அவர்களே !


  6. // தங்கம்பழனி
    October 28, 2011 4:16 PM

    யதார்த்தமான கவிதை.. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...!!

    குறிப்பாக கடைசி வரிகள் கவர்ந்துள்ளது..!

    நடுத்தர குடும்பங்களில் நிறைய தகப்பன்மார்களின் நிலமையும் இதுதான்..//


    மனமார்ந்த நன்றிகள் தங்கம்பழனி அவர்களே !


  7. Anonymous Says:

    mika nanru.
    Eniya vaalththu.
    like Panam...This is mine...
    http://kovaikkavi.wordpress.com/2013/09/07/58-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dphotopoem/


  8. நன்றி என் அன்பின் உறவுகளே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..