கொடுமை ..


மாமியார் மாமனாரின்
முள்ளாய் குத்தும் வார்த்தைகள்
நாத்தனார் கொழுந்தியாள்களின்
நெஞ்சை கிழிக்கும் கேள்விகள்
என் வருகை கண்டதும்
சகுனம் பார்க்கும் ஜாதி சனம்
ஏக்கங்கள் தனக்குள் வைத்து
எனக்காய் மட்டும் சிரிக்கும் கணவன்
என் அழுகை புலம்பல்களை
அன்றாடம் கேட்கும் கோவில் தூண்கள்
உணர்ச்சியும் உயிரும் உள்ள
நடை பிணமாய் நானும்
பெண்மைக்கே உரித்தான தாய்மை
அடையாத எனக்கு
பால் கொடாத மார்புகளும்
கர்ப்பம் சுமக்கும் கருவூலமும்
எதற்கு ?
இறைவா என்னை கொன்று போடு
இல்லை என்றால் பிள்ளை ஒன்று கொடு ..

(நாகரீகம் என்னதான் வளர்ந்தாலும் நாட்டுப்புறங்கள்  இன்னும் மாறவில்லையே ) அன்புடன் உங்கள் யசோதா காந்த்

3 Responses
  1. Anonymous Says:

    தாய்மைக்கு ஆண்,பெண் பங்களிப்பை நன்கு உணர்ந்த இந்த சமூகம்
    பெண்ணை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.நாகரீகத்தைப் பற்றி பேச
    வேக்கப்படவேண்டும்.

    தமிழ் வளன்.


  2. நன்றி நண்பர் தமிழ் வளன் அவர்களே


  3. R.Gopi Says:

    கல்யாணம் ஆகி, குழந்தை பெறாத பெண்ணின் ஏக்கத்தை / சோகத்தை வெகு அழகாக வார்த்தைகளில் வடித்துள்ளீர்க...

    அந்த நிலையில் அவளின் வேதனையில் இது போன்ற சொற்கள் தான் வரும்...

    வாழ்த்துகள் யசோ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..