12/27/2016 04:10:00 PM
|
by யசோதா காந்த்
கண்ணே கனி அமுதே
**********************
முத்து முத்தாய் சிரிப்பழகு
கொத்து கொத்தாய் பூ இதழ் அழகு
தத்தி தத்தி துள்ளும் முயலாய்
நெஞ்சய் தட்டி தட்டி செல்கிறாய்
கட்டி கட்டி உனை அணைக்க
மனம் எட்டி எட்டி தவிக்கிறதே
நெட்ட நெடுநேரத்திலும்
உனை கிட்டகிடத்தி காண்கையில்
உள்ளம் கொள்ளை போகிறதே
எல்லா உறவின் முத்த்திற்க்கு எல்லை உண்டு
எல்லையில்லா முத்தமழை உனக்கல்லவோ
என் கண்ணே கனி அமுதே
அன்புடன்
யசோதா காந்த்
...
3/11/2016 06:00:00 PM
|
by யசோதா காந்த்

மழலை
***********
உன்முகம் காண்பேனோ
உன் கொஞ்சும் குரல் கேட்பேனோ
உன் அழகை இமைக்காமல்ரசிப்பேனோ
உன் இதழ் சிந்தும் முத்தம்தொடுவேனோ
கனவிலும் கற்பனையிலும்
கலந்த என் உறவே ...
விழிகள் மூடி கிடந்தாலும் நீ மட்டும் என்னில்
விழிப்புடன் ....
அன்புடன்
உங்கள் யசோதா காந்த...
4/03/2014 12:10:00 PM
|
by யசோதா காந்த்

விட்டு சென்றாயோ ?
***********************
நீ மீட்டும் வீணையாய் நானிருந்தேன்
மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டாய்
காணும்பொருள் எல்லாம் நான்என்றுரைத்தாய்
காடு மலை தாண்டி செற்றுவிட்டாய்
தேடல் எல்லாம் என்னுள் அடக்கம் என்றாய்
தெரிந்தே என்னை தொலைத்துவிட்டாய்
கள்வன்போல் பதுங்கி நின்றுஎன்னை
கவனிப்பதை நான் அறியேனோ ?
இடைவெளி நம்மில் உண்டெனினும்
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் தெரிந்தனவே
கணக்காய் யாவையும் வைத்துள்ளேன்
நீ காரணம் கேட்கையில் விடை சொல்ல
வியப்பாய் நிற்பதும் நான்மட்டுமல்ல
நீ விதைத்து சென்ற வார்தைக்களும்தான்
விளக்கின்...
11/18/2013 12:04:00 PM
|
by யசோதா காந்த்

பிடிவாதம்
***********:
தெளிந்த பாலை
குடிக்க சொன்னாலும்
அசைவு ஒன்றும் இல்லை
பதில் சொல்லுங்கள் என
ஆயிரம் முறை கேட்டாலும்
சட்டை செய்வதில்லை ..
கதறி அழுது அடம் பிடித்தாலும்
கண்டுகொள்வதே இல்லை
பற்றி எரிந்து தேகமெங்கும்
தீ படர்ந்தாலும்
வேதனையோ விசும்பலோ வெளிப்படுத்துவதே இல்லை
முடிவு செய்தால்
அதிலிருந்து .
பின் மாறாத
பிடிவாதக்காரர்கள் தான் இவர்கள்
.மரணம் எனும் ஏட்டில் கையெழுத்து இட்ட இறந்தவர்கள் ...
~யசோதா காந்த்...
4/29/2013 12:41:00 PM
|
by யசோதா காந்த்

மலடி ... ************ ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டுக்கொரு மகப்பேறு அளவில்லா பூரிப்பும் எல்லையில்லா ஆனந்தமும் .. பிள்ளைகள் வளரும் அழகை ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள் விளையாட்டு பொருட்களையோ பொக்கிசமாய் பாதுகாத்தாள்.. சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள் பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும் பால் கொடுத்த முலைகளும் .. கருவை வளர்த்த கருவறையும் மகிழ்ந்து ...கொண்டாடியது ... மலடியாகவே இருந்திருக்கலாமே என மனம் கசந்தாள் .. அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை அடைந்த போது .......
3/10/2013 09:26:00 PM
|
by யசோதா காந்த்

பெண்மை சாபமோ....
*************************************
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மானிடரை
நினைக்கையிலே ....
இந்தவரிகள் எத்தனை உண்மை வரிகள் ...
பெண் என்பவள் ..தாயாய் ..சகோதரியாய்,,மனைவியாய் ..குழந்தையாய்
..இன்னும் பல உருவங்களில் இந்த உலகத்தை வலம் வருகிறாள் ..அப்படி பட்ட பெண்ணை
மரியாதை கொடுத்து அன்பு செலுத்துவோர் பலர் ..ஆனால் பெண்ணை போதை பொருளாய் சிலர்
பார்ப்பதால் ஆண் வர்க்கத்திர்க்கே தலை குனியும் நிலை அன்றோ ...
இன்றைய நாட்களில் பல அதிர்ச்சியான செய்திகள்...காண்கிறோம் கேட்கிறோம்
நம்...
2/27/2013 06:39:00 PM
|
by யசோதா காந்த்

தமிழ் தாய் ...*********ஆதியில் தோன்றினாள்அழகிய மங்கையவள் ..
தெவிட்டாத இன்பம் தரும்தெளி தேன் அமுதமும் அவள்
கல்லாதவரையும் கவி எழுத செய்யும்காவிய தலைவி அவள் ..
அன்னை அவளை கற்றேபட்டம் பெற்ற பண்டிதர் மேதைகள் பலர்
உணர்வுகளில் அன்பை ஊற்றிஓர் இனமாய் நம்மை சேர்ப்பாள்
எங்கோ நம்மிலோருவனுக்கு துன்பம் நேர்ந்திடினும்உலகையே பதறி எழ செய்வாள்
தாயின் பெயரை நாமும் சூட்டிஅழைத்து மகிழ்வோம் பிள்ளை செல்வங்களை ..
.
செந்தமிழ் சொல்லெடுத்து ..அழகாய் பாட்டு இசைத்து ..
தமிழ்...